தலைமைசெயலகத்தில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனையா.? அலெர்ட் ஆன போலீஸ்- பாதுகாப்பு அதிகரிப்பு

By Ajmal Khan  |  First Published Jul 17, 2023, 10:54 AM IST

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட போது தலைமைசெயலகத்திலும் உள்ளே நுழைந்து சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து தலைமைசெயலகத்தில் சோதனை நடைபெறலாம் என்ற காரணத்தால் தலைமைசெயலாக வாயில்ல பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 


பொன்முடி வீட்டில் சோதனை

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தொடரப்பட்ட வழக்கில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 13 ஆம் தேதி சோதனை நடத்தி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.  அப்போது ஏராளமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக தலைமைசெயலகத்திற்கு சென்ற அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் அறையிலும் சோதனை நடத்தியது. இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழக அரசு அலுவலகங்களில் முக்கியம் மற்றும் ரகசிய ஆவணங்கள் இருக்கும் இடத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது கண்டிக்கதக்கது எனவும், மாநில அரசை மத்திய அரசு மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

Latest Videos

undefined

தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனையா.?

இந்தநிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோரின் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்தநிலையில் அடுத்தகட்டமாக தலைமைசெயலகத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியில் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக தலைமைசெயலகத்தில் நுழைவு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தலைமைசெயலகத்திற்கு வரும் வாகனங்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்த பிறகே தங்கள் அலுவலகங்கள் இருக்கும் பகுதிக்கு செல்லஅனுமதி வழங்கப்படுகிறது. மேலும் அடையாள அட்டை மற்றும் அனுமதி இல்லாத வாகனங்களை போலீசார் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவருகின்றனர். 

இதையும் படியுங்கள்

பொன்முடியை அமலாக்கத்துறை குறிவைக்க காரணம் என்ன.? 11 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கா.? வெளியான தகவல்

click me!