பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது தாயாரையும் ஆபாசமாக பேசி முகநூலில் பதிவிட்ட கோவையை சேர்ந்த ரமேஷ் என்ற நபர் மீது பாஜகவினர் புகார் கொடுத்த நிலையில், போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.
அண்ணாமலையை மிரட்டி வீடியோ
சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பத்திரிகையாளரிடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து இந்த வீடியோ காட்சிகளை வைத்து கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது தாயார் குறித்து ஆபாசமாகவும், அவதூறு பரப்பு வகையிலும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ காட்சியால் அதிருப்தி அடைந்த கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி போத்தனூர் காவல் நிலையத்தில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
undefined
புகார் கொடுத்த பாஜக
இந்த புகார் தொடர்பாக ரமேஷ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பட்டாம் மற்றும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் (53) என்ற நபர் அண்ணாமலையை ஆபாசமாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதும் தெரியவந்தது.
கைது செய்த பாஜக
இதனைத் தொடர்ந்து ரமேஷ் மீது பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாசமாக பேசுதல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிக்கும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல், பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் ரமேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.