ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா இறந்த நிலையில், அந்த தொகுதியில் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திருமகன் ஈவேரா காலமானார்
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார். அவரது மறைவு அரசியல் கட்சி தலைவர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதனையடுத்து அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்தநிலையில் சட்டமன்ற உறுப்பினர் மறைவு காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறவுள்ள முதல் இடைத்தேர்தல் ஆகும். மேலும் அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் நடைபெறவுள்ள தேர்தல் ஆகும்.
இரட்டை இலை யாருக்கு
எனவே ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டு ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் நடைபெறவுள்ள தேர்தலில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற குழப்பம் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே நீடித்து வருகிறது. எனவே இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு இரண்டு பேரும் கையெழுத்திட்டால் மட்டுமே இரட்டை இலை கிடைக்கும். எனவே இந்த தேர்தலில் அதிமுகவின் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் என யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலை ஏற்படுக்கூடும் என கூறப்படுகிறது. ஒரு வேளை உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தாலும் மற்றொரு தரப்பினர் அந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல் முறையீடு செய்யவே வாய்ப்பு உள்ளது.
இடைத்தேர்தல் எப்போது.?
இந்தநிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது என்ற கேள்விக்கு தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குள் அந்த தொகுயில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. ஆனால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் அறிவிக்குமா அல்லது அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலுடன், ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படுமா என்பதை இந்திய தேர்தல் ஆணையம் தான் அறிவிக்கும் என கூறினார்.
இதையும் படியுங்கள்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு... விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!