ஜெயிலர் படம் பார்ப்பதற்கு காட்டும் ஆவலை, நம் சுதந்திரத்திற்காக ஜெயலுக்கு போனவர்களை பற்றி படிப்பதிலும் காட்ட வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழிசை “ ஜெயிலர் படம் பார்ப்பதற்கு காட்டும் ஆவலை, நம் சுதந்திரத்திற்காக ஜெயலுக்கு போனவர்களை பற்றி படிப்பதிலும் காட்ட வேண்டும். விடுதலை போராட்ட வீரர்களின் சுயசரிதைகள், தியாகங்களை படிக்க படிக்க நமது வாழ்க்கை சிறக்க உதவும். இதன் மூலம் நல்ல கருத்துகளை கற்றுக்கொள்ள முடியும்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் மதன் லால் திங்ரா என்பவர் இங்கிலாந்துக்கு சென்று கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக்கொன்றார். இதனால் அவர் அங்கு சிறையில் அடைக்கப்பட்டார். தன் நாட்டு மக்களை கொன்றவர்களையும் கொடுமைப்படுத்தியவர்களையும் அவர்கள் மண்ணிலேயே கொல்ல வேண்டும் என்று சென்ற இளைஞர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போனார்கள். இதை எல்லாம் நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
கிராம நத்தம் பட்டா பதிவு திடீர் நிறுத்தம்.. பத்திரப்பதிவு அதிகாரிகள் என்ன சொல்கின்றனர்?
இன்று நாம் வேலை கிடைக்கவில்லை என்ற நிலையை பார்க்கிறோம். ஆனால் அவர்கள் எல்லாம் சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற சூழலை பார்த்துள்ளனர். இன்று நாம் சந்திக்கும் சவால்கள் எல்லாம் சவால்களே இல்லை. நம் வாழ்க்கையை எப்படி எல்லாம் உயர்த்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.