அட த்தூ.. சிவப்பு நிறத்தில் பெண்ணின் உள்ளாடையை மாஸ்காக அணிந்து வந்த பயணி.. விமானத்தில் நடந்த களேபரம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 18, 2021, 1:40 PM IST
Highlights

இந்நிலையில், அமெரிக்க ஏர்லைன்ஸ் இது தொடர்பாக அறிக்கை ஒன்று  வெளியிட்டுள்ளது. மாஸ்குக்கு பதிலாக உள்ளாடை அணிந்து வந்த நபரை விமான ஊழியர்கள் விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே கண்டறிந்து வெளியேறியுள்ளனர்.

பெண்ணின் உள்ளாடையை ஆண் ஒருவர் முக கவசமாக அணிந்து வந்த அருவருப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் விமானத்தில் அந்த நபர் உள்ளாடையை மாஸ்க்காக அணிந்து பயணிக்க வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அவரின் இந்த செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரை 150-க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி மட்டுமே இந்த வைரசில் இருந்து காப்பாற்ற முடியும் என்ற லட்சியத்துடன் ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசிகளை உருவாக்கிய மக்களுக்கு செலுத்தி வருகின்றன. அதே நேரத்தில் கொரோனா  பலவகைகளில் உருமாறி வரும் நிலையில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என ஒவ்வொரு நாடும் கட்டாயமாக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மாஸ்க் அணிவது ஒவ்வொரு நாட்டிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.

அந்தவகையில் மாஸ்க் அணியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் டெல்டா வகை வைராசாக உருமாறி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில், தற்போது ஒமைக்ரான் என்ற வைரஸ் ஆக உருமாறியுள்ளது. இது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இதுவரை 30க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளன. இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்பதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதேபோல் ஒவ்வொருவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகில் சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று என்பது நாடகம் என்றும், இது மக்கள் மத்தியில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் விமர்சித்து வருகின்றன. இதே போன்ற ஒரு கருத்தை பிரேசில் நாட்டு அதிபர் வெளிப்படையாகவே பேசியது குறிப்பிடத்தக்க.

இந்த வைரசால் உயிரிழப்புகள் நடந்து வரும் அதே நேரத்தில் எதையும் பொருட்படுத்தாமல் பலர் பொது இடங்களில் முகக்கவசம் இன்றி வலம் வருவதை காணமுடிகிறது இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள  யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு நபர்  முக கவசம் அணிவதை எதிர்க்கும் வகையில் முக கவசத்திற்கு மாற்றாக பெண்களின் அந்தரங்க உறுப்பை மறைக்க பயன்படும் உள்ளாடையை அணிந்து வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் முகக்கவசத்திற்கு மாற்றாக உள்ளாடையை அணிந்திருப்பதை பார்த்த பலரும் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். விமானத்தில் பலரும் வேடிக்கை பார்த்தனர். அப்போது ஒரு சிலர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் அவரின் இந்த செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அப்போது விமான பயணியின் இந்த செயல் சக பயணிகளை முகம் சுழிக்க வைத்தது. 

அந்த வீடியோவில் அந்த பயணி பெண்களின் உள்ளாடையை அணிந்திருப்பதை பார்த்த விமான பணிபெண்கள் அவரை முறையா மாஸ்க அணிய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் அதை ஏற்க மறுத்து அவர்களுடன் அந்நபர் வாக்குவாத்தில் ஈடுகிறார். இதனால் விமானத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. நல்லவேளையாக விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே அந்த பயணியை ஊழியர்கள் விமானத்தை விட்டு கீழே இறக்கிவிடுகின்றனர். இவ்வாறாக அந்த காட்சி அமைந்துள்ளது.  இந்நிலையில் தான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என அந்த பயணி உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று ஆணையிட்டு இருப்பதால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பது முட்டாள்தனத்தின் உச்சம், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தான் முகக்கவசம் அணிந்து அதனால் நொந்துபோயுள்ளதாகவும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதனால்தான் தான் அப்படி நடந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில், அமெரிக்க ஏர்லைன்ஸ் இது தொடர்பாக அறிக்கை ஒன்று  வெளியிட்டுள்ளது. மாஸ்குக்கு பதிலாக உள்ளாடை அணிந்து வந்த நபரை விமான ஊழியர்கள் விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே கண்டறிந்து வெளியேறியுள்ளனர். இதனால் பயணிகளுக்கு தேவையற்ற இடையூறு தவிர்க்கப்பட்டுள்ளது. நடுவானில் ஏற்பட இருந்த சிக்கல் தரையில் தீர்க்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் விமான குழுவை நாங்கள் பாராட்டுகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளதுடன், இனி  ஜென்னே என்ற அந்த நபர் மீண்டும்  அமெரிக்கன் ஏர்லைன்ஸ்சில் பயணிகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!