Senthil Balaji : திமுகவின் வாக்குறுதியே இதுதான்யா..லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. செந்தில் பாலாஜி விளக்கம் !

By Raghupati R  |  First Published Dec 18, 2021, 1:39 PM IST

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடத்தும் தொடர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.


கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அமைந்துள்ள்ள நகர்ப்புற மேம்பாட்டு அடுக்கு மாடி குடியிருப்பகளை அழகு படுத்தும் விதமாக, கோவை மாநகராட்சி  'ஸ்ட்ரீட் ஆர்ட்' என்ற அமைப்புடன் இணைந்து கட்டடங்களில் அழகிய ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தி வருகிறது. கோவையில் , இந்த அமைப்பின் சார்பில், வரையப்பட்ட ஓவியங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளின் ஓவியத்திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக, கோவை மாநகராட்சியுடன் இணைந்து, உக்கடம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகளுக்கான, ஓவியப்பயிற்சி மற்றும் போட்டி நடைபெற்றது.

Latest Videos

undefined

இதில் சிறந்த ஓவியம் வரைந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கும் விழா குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,  ‘அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர் கலாச்சாரத்தை தடுக்கும் விதமாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய ஓவியங்கள் வரையப்படும் எனவும் விரைவில் அதற்கான அறிக்கை வெளியிடப்படும்.

நேற்றைய தினம் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தது தங்களது ஆட்சி போய்விட்டது என்ற விரக்தியில் செய்துள்ளனர்.  முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் சோதனை மேற்கொண்டது கடந்த ஆட்சியில் யார் யார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றியுள்ளதாகவும், அதனடிப்படையில் தான் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது எனவும் கூறினார்.

click me!