எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், ஓபிஎஸ் அணி பாஜக அணியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக- பாஜக கூட்டணி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியின் காரணமாக பல பிளவுகளாக அதிமுக பிளவு பட்டுள்ளது. ஆரம்பத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொண்டு ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தினார். ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவியையும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியையும் ஓ பன்னீர்செல்வத்திற்கு வழங்கினார்.
இதனை அடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை தலைமை தோல்வி அடைந்ததன் காரணமாக அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் எழும்பியது. தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார் அப்போது ஓ பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டும் நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பாஜகவின் தொகுதி பங்கீடு
இதனை அடுத்து ஓ பன்னீர்செல்வம் பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தினாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி அணி ஓபிஎஸ் அணி டிடிவி அணி ஆகிய மூன்று அணிகளையும் இணைத்து தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டது. இதற்காக தொகுதிகளையும் தங்களிடம் வழங்குமாறு பாஜக கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிமுகவை சமாதானம் செய்ய பாஜக தலைமை பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதில் எந்த வித முன்னேற்றமுல் இல்லையென கூறப்படுகிறுத.
ஓபிஎஸ் அணியின் நிலைப்பாடு என்ன.?
இந்த சூழ்நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக விலகிய நிலையில் அடுத்ததாக என்ன செய்யலாம் என பாஜக யோசித்து வருகிறது. அதன்படி ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை இணைத்து கூட்டணியை உருவாக்கலாம் எனவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இணையுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதற்கான பதில் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் வழங்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து தங்களின் நிலைப்பாடுகளை விவரிக்க உள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்