அதிமுகவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கும் பாஜக..! பிடி கொடுக்காமல் விலகி ஓடும் இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Sep 28, 2023, 10:21 AM IST

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், சமாதானப் பேச்சு நடத்தி மீண்டும் கூட்டணி உறவு தொடர்வதற்காக பாஜக தேசிய தலைமை பல முறை முயன்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நிராகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


அதிமுக- பாஜக கூட்டணி முறிவு

அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட 38 இடங்களில் அதிமுக-பாஜக கூட்டணி தோல்வியை தழுவியது. இதனை அடுத்து சட்டமன்றத் தேர்தலிலும் இரண்டு கட்சியும் கூட்டணி அமைத்தது.  அப்போது 76 இடங்களை மட்டுமே கைப்பற்றிய அதிமுக கூட்டணி தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சி அதிகாரத்தை இழந்தது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அண்ணாமலைக்கு எதிர்ப்பு

இதனை அடுத்து தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியது. தமிழகத்தில் திமுக  ஆட்சி அமைத்த நிலையில் தாங்கள்தான் எதிர்கட்சி என பாஜக தொடர்ந்து கூறிவந்தது.  இது அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்பையும் கோபத்தையும் அதிகரித்தது. மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் கூறி வந்தது. இதனால் பாஜக - அதிமுக இடையிலான மோதல் அதிகரிக்க தொடங்கியது.

இந்த காலகட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.  இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு எதிராக தங்களது கருத்துக்களை கூறி வந்தனர். இதனால் இரண்டு தரப்பு தலைவர்களும் மோதிக்கொண்டனர்.

விலகி ஓடும் எடப்பாடி

இதனையடுத்து நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதிமுக எடுத்த முடிவு பாஜகவினையை அதிர்ச்சி அடைய செய்த நிலையில் மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து சமாதானப்பேச்சுவார்த்தை நடத்த பாஜக தலைமை திட்டமிட்டது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றவும் தயார் என்ற முடிவுக்கு வந்தது. ஆனால் இதில் எந்தவித சமரச பேச்சுக்கும் அதிமுக இடம் கொடுக்கவில்லையென கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொள்ள பாஜக தேசிய தலைவர்கள் பல முறை முயன்றும் அந்த அழைப்புகளை நிராகரித்து வருவதால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என தெரியாமல் பாஜக குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

மாஸ் காட்டும் இபிஎஸ்.. அதிமுகவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி.! யார் இந்த ஜெயசுதா?

click me!