அதிமுக தலைமை அலுவலக பத்திரம் யாரிடம் உள்ளது..? திருட்டு புகாருக்கு காவல்நிலையத்தில் பதிலடி கொடுத்த ஓபிஎஸ் அணி

By Ajmal Khan  |  First Published Jul 26, 2022, 12:23 PM IST

அதிமுக தலைமை அலுவலக அசல் பத்திரம் ஜெயலலிதா காலத்திலேயே பத்திரத்தை பாதுகாக்கும் வகையில், தலைமை அலுவலகத்தில் வைப்பதில்லையென ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.


 அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி  நடைபெற்ற போது, அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களோடு வந்தார். அப்போது ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால் ஏராளமான வாகனங்கள் சேதம் ஏற்பட்டது. மேலும் அதிமுக தலைமை அலுவலக கதவுகள் அடித்து உடைக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து நீதிமன்றத்தில் சீலை அகற்றுவது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுலவக சாவியை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த வாரம் அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட்ட போது உள்ளே இருந்த பொருட்கள் சிதறடிக்கப்பட்டு இருந்தது. மேலும் பிரோவில் இருந்த  ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். மேலும் அதிமுக தலைமை அலுவலக அசல் பத்திரம் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் திருடப்பட்டதாக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இந்த புகாருக்க பதில் அளிக்கும் வகையிலும், ஓபிஎஸ் அணி சார்பாக ஜேசிடி பிரபாகர் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் பதில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் சென்ற போது இபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ள தி.நகர் சத்யா, ஆதிராஜராம், அசோக் ஆகியோர் அடியாட்களோடு அதிமுக தொண்டர்களை தாக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றதாகவும் புகாரில் கூறியுள்ளார்.   கடந்த 23.07.2022 அன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தங்களிடம் உண்மைக்கு புறம்பான புகார் ஒன்றை கொடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது, அதில் சில ஆவணங்களை குறிப்பிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் அவரோடு வந்த கழக மூத்த நிர்வாகிகள் பெயரை குறிப்பிட்டு அவர்கள் திருடி சென்றதாக புகார் சொல்லியுள்ளார்.

அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை, அது காழ்புணர்ச்சியோடு கொடுக்கப்பட்ட புகார். மேலும், கடந்த 21-07-2022 அன்று அரசு அதிகாரிகளால் தலைமைக்கழகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றிய பின்னர் திரு.சி.வி. சண்முகம் மேலாளர் மகாலிங்கம் உள்ளே சென்றனர். அவர்கள் செல்வதற்கு முன்பாகவே உள்ளே இருந்த அலுவலக ஊழியர் ஊடகவியலாளர்கள் யாரையும் உள்ளே விடாமல் தடுத்தனர். அப்போது சி.வி. சண்முகம்,  NEWS J கேமராமேனை மட்டும் உள்ளே வா என அழைத்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அன்றையதினம் ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

பாஜகவின் பரிபூரண ஆசி யாருக்கு.? ஓபிஎஸ்-இபிஎஸ்ஸை பிரதமர் மோடி சந்திப்பாரா.? எதிர்பார்ப்பில் இரட்டை தலைமை!

 அவர் செயல் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு இல்லாமல், தீங்கான நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. மேலாளர் மகாலிங்கம், துணை மேலாளர் மனோகரன் மற்றும் சில ஊழியர்கள் கூட்டு சேர்ந்து கழக தலைமையகத்தில் இருந்த விலை உயர்ந்த பொட்ருகளை களவாடி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் புரட்சித் தலைவி அம்மா காலத்தில் இருந்தே அசல் ஆவணங்களை தலைமை கழகத்தில் வைப்பதில்லை, கழக சொத்துக்களை பாதுக்காக்கும் பொருட்டு இந்த முடிவு அம்மா காலத்திலேயே எடுக்கப்பட்டது என்பதனை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.  மேலும் 23.07.2022 அன்று அவர் கொடுத்த புகாரில் சொல்லப்பட்ட அலுவலக இருப்புத் தொகை ரூபாய் 31,000/- மற்றும் பிறசொத்துக்களின் மூல பத்திரங்கள் அங்கு இருந்தாக சொல்லுவது உண்மைக்கு புறம்பானதாகும்.

தீங்கான நோக்கத்தோடு புகார் கொடுக்கப்பட்டதாகும். மேலும் தேவர் திருமகனார் தங்க கவசம் வைத்துள்ள வங்கியின் பாதுகாப்பு பெட்டக ஆவணம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கழக பொருளாளரும் தற்போதைய கழக ஒருங்கிணைப்பாளருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேவர் திருமகனார் குடும்ப வாரிசு இணைந்தே செயல்படுத்தும் விதமாக மதுரையில் உள்ள வங்கியில் கணக்கு ஏற்படுத்தி அசல் ஆவணத்தை கழக ஒருங்கிணப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவரிடமே அம்மா அவர்கள் கொடுத்து வைத்திருந்தார்.

அது தற்போது ஒருங்கிணைப்பாளரிடமே உள்ளது. கழக வாகனங்களின் ஆவணங்கள் வாகனத்தை பராமரிக்கும் பொருட்டு மேளாலர் மகாலிங்கம் வசம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த ஆவணங்களை மேற் சொன்ன ஆவணங்களை மாவட்ட செயாலாளர் ஏற்பாடு செய்த குண்டர்கள் தூக்கி வீசிய போது கழக தொண்டர்கள் கைப்பற்றி பாதுகாக்க வேண்டி ஒருங்கிணைபாளரின் வாகனத்தில் ஒப்படைத்தனர் என கூறியுள்ளார். 

ஓபிஎஸ் தொகுதியில் கெத்து காட்டும் இபிஎஸ்...! வெளி மாவட்ட தொண்டர்களை களத்தில் இறக்கி போராட்டம் நடத்த திட்டம்

எனவே எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு செல்லாமல் தலைமை கழகத்திற்குள் குண்டர்களை ஏவிவிட்டு பொருட்சேதங்களை ஏற்படுத்த தூண்டிய எடப்பாடி க.பழனிசாமி. சி.வி.சண்முகம் மற்றும் அங்கிருந்து கலவரம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுத்திய தி.நகர் சத்தியா, விருகம்பாக்கம் வி.என்.ரவி, எம்.கே.அசோக். ஆதிராஜாராம், மேலாளர் மகாலிங்கம், மனோகரன் ஆகியோர் மீதும் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத குண்டர்கள், ரவுடிகள் மீது தலைமை கழகத்தில் தாக்குதல் நடத்தி சேத படுத்திய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுத்தும் கழக தொண்டர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கொடுக்குமாறு தங்களை கனிவுடன் கேட்டுக்கொள்வதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

பாஜக ஆலோசனை கேட்டு கட்சியை நடத்த வேண்டிய அவசியம் இபிஎஸ்க்கு இல்லை..! எகிறி அடிக்கும் எஸ்.பி.வேலுமணி


 

click me!