அதிமுக தலைமையகமான எங்களை கோயிலை, ஸ்டாலின் துணையோடு ஓபிஎஸ் தாக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என அதிமுக பளவுபட்டுள்ளது. இந்தநிலையில் குடியரசு தலைவர் பிரிவு உபச்சார விழாவில் பங்கேற்க சென்ற இபிஎஸ், பிரதமர் மோடி மற்றும் உளைதுறை அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்திக்க மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இனையடுத்து 5 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த இபிஎஸ், குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் சென்னை திரும்பினார். அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என பாஜக கணித்துள்ளது. எனவே ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர்கள் இணைந்து இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என திட்டவட்டமாக பாஜக நம்புகிறது. எனவே தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமையை பாஜக தலைமை ஏற்றுக்கொள்ளவில்லையென்றே கூறப்படுகிறது.
இபிஎஸ்சை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார்
இந்தநிலையில் அதிமுக சார்பாக தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாட்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய எஸ்.பி.வேலுமணி, ``பொதுச்செயலாளராக எடப்பாடி வரவேண்டும் என்றுதான் அத்தனைபேரும் நினைத்தார்கள். அது நடந்துவிட்டது. எடப்பாடி பொதுச்செயலாளரானால் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக-வுக்கும் பயம் என கூறினார். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் 1.5 சதவிகிதம் வாக்குதான் வித்தியாசம் இருந்ததாக தெரிவித்தவர்,. திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஒன்றரை ஆண்டில் எதுவும் செய்யாமல் மக்கள் விரோத ஆட்சியாக உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவ மிஷனரிகள்தான் காரணம்… சர்ச்சையை கிளப்பிய சபாநாயகர் அப்பாவு!!
பாஜக ஆலோசனை தேவையில்லை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது, மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினைப் பொறுத்தவரை தினமும் ஏதாவது விளம்பரத்தில் வந்தால் போதும் என நினைத்து கொண்டிருப்பதாக கூறினார். மத்திய அரசு சொன்னதால் மின் கட்டணம் உயர்த்தியதாகக் திமுக கூறுகிறது. எப்போதும் மத்திய அரசை திட்டுபவர்கள், இதில் மட்டும் ஏன் கேட்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க மத்திய அரசு வற்புறுத்தியது ஆனால் அதனை திமுக அரசு செய்ததா எனவும் விமர்சித்தார். காவல்துறை அதிமுக தொண்டர்கள் மீது வழக்கு போட்டு வருகிறது. இதையெல்லாம் திருப்பி கொடுக்கும் காலம் விரைவில் வரும் என கூறினார்.
பிரதமர் ஏற்பாடு செய்த குடியரசு தலைவர் பிரிவு உபசார விழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்தவர், அதிமுக கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடாது என மாநில தலைவர் அண்ணாமலை தெளிவாக கூறியுள்ளதாக தெரிவித்தார். அ.தி.மு.க-வை எப்படி நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என கூறியவர், பா.ஜ.க-வினர் அவர்கள் கட்சியைப் பார்த்துக் கொள்வார்கள். யாரின் ஆலோசனையைக் கேட்டும் கட்சியை வழிநடத்த வேண்டிய அவசியம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லையென திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்