மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்ற நிலையில், ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனியில் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
மின் கட்டண உயர்வு-அதிமுக போராட்டம்
மின் யூனிட்டை பொறுத்து மின் கட்டணமும் அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தமிழக அரசின் அறிவிப்பிற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதிமுக, பாஜக சார்பாக போராட்டமும் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ள நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் போராட்டத்தின் போது குற்றம்சாட்டப்பட்டது. இதனிடையே அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தேனி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் போராட்டம் நடைபெறவில்லை. தேனி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளதால் அந்த பகுதியில் போராட்டம் நடத்தவில்லை
தேனியில் கெத்து காட்டும் இபிஎஸ்
எனவே அந்த மாவட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர்களை பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அதில் முக்கியமான மாவட்டமான ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் நேற்று போராட்டம் நடத்தப்படவில்லை. அந்த மாவட்டத்திற்கு பொறுப்பாளராக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது. ஒற்றை தலைமை பிரச்சனைக்கு பிறகு நடைபெறும் போராட்டம் என்பதால் தேனி மாவட்டத்தில் கெத்து காட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக தேனி மாவட்டத்திற்கு அருகில் உள்ள மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை இறக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக அந்த பகுதி மாவட்ட செயலாளர்களுக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளாக கூறப்படுகிறது.
அச்சச்சோ.! அதிமுகவில் 15 பேர் நீக்கம்.. எடப்பாடி அதிரடி முடிவு - யார் யார் தெரியுமா ?
தொண்டர்களுக்கு பரோட்டா
இந்தநிலையில் தேனியில் நடைபெறும் மாவட்டத்தில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்டியுள்ள அம்மா கோயில் வளாகத்தில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யும் பணியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது குடும்ப உறுப்பினர்களோடு ஈடுபட்டார். அப்போது உதயகுமார் தனது மனைவி உதவியோடு பரோட்டா தயாரித்து அசத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்