எங்கள் கட்சியினர் மீது போடப்படும் வழக்குகளுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். காவல்துறையினர் திமுகவுக்கு அடிபணிந்து கிடக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிந்தால் தக்க சமயத்தில் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரிவு உபச்சார விழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து இபிஎஸ்-க்கு மட்டுமே அழைப்பு வந்ததது. அந்த விழாவில் மோடி, இபிஎஸ்-யிடம் தான் அதிகம் பேசினார். அதை நான் நேரில் பார்த்தேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொள்ளாச்சி திருவள்ளூவர் திடலில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அப்போது, பேசிய எஸ்.பி.வேலுமணி;- விவசாய குடும்பத்தில் பிறந்து கடந்த 4½ ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தியுள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியினை கொடுத்துள்ளார்.
undefined
இதையும் படிங்க;- இனி இவர்தான் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்..! ஓபிஎஸ் வலையில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி
ஆனால். இந்த திமுக ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. எதுவுமே செய்யாத ஆட்சி தான் இந்த திமுக ஆட்சி. இந்த ஆட்சியானது விளம்பர படத்தில் மட்டும் தான் இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக ஒரு நாள் கூட சொத்து வரியை உயர்த்தியது இல்லை. ஆனால். இன்றைக்கு திமுக ஆட்சியில் 25, 50, 100 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்களுக்கு திமுக அரசு வழங்கிய போனஸ் தான் இந்த வீட்டு வரி மற்றும் மின் கட்டண உயர்வு. இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் இதற்கு மத்திய அரசு தான் காரணம் என்கிறார்கள்.
தாலிக்கு தங்கம் திட்டம் அம்மா உணவகம், அம்மா கிளினிக், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி ஆகிய திட்டங்களை முடக்கியது தான் இந்த திமுக அரசு. நம்முடைய கட்சி அலுவலகம் எனும் கோவில் சேதம் அடைந்ததற்கு திமுக தான் காரணம். கள்ளக்குறிச்சி கலவரத்திற்கும் திமுகவே காரணம். இதுவரை 500-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதாக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் காவல் துறையானது யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று நீதிபதியே வினவும் அளவிற்கு உள்ளது இந்த திமுக அரசு.
எங்கள் கட்சியினர் மீது போடப்படும் வழக்குகளுக்கு நாங்கள் பயப்படமாட்டோம். காவல்துறையினர் திமுகவுக்கு அடிபணிந்து கிடக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிந்தால் தக்க சமயத்தில் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும். தற்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை. திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் தான். டெல்லியில் நடந்த ஜனாதிபதி பதவியேற்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து பாஜக.வின் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் மட்டும் தான் அழைப்பு வந்தது. மற்ற யாருக்கும் வரவில்லை என வேலுமணி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- டெல்லி கதவு க்ளோஸ்.. எடப்பாடி எங்க பக்கம் வந்தே ஆகணும் - ஓபிஎஸ் ஆதரவாளர் அதிர்ச்சி பேட்டி.!