அதிமுகவில் ஒரே சண்டை.. அதான் பாஜகவுக்கு வந்துட்டேன்.. முன்னாள் கட்சியை டேமேஜ் செய்த நயினார் நாகேந்திரன்!

Published : Jul 15, 2022, 06:55 AM IST
அதிமுகவில் ஒரே சண்டை.. அதான் பாஜகவுக்கு வந்துட்டேன்.. முன்னாள் கட்சியை டேமேஜ் செய்த நயினார் நாகேந்திரன்!

சுருக்கம்

அதிமுகவில் இரு தரப்புக்கும் சண்டை நடந்து வந்ததால்தான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன் என்று தமிழக சட்டப்பேரவை பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ராமையன்பட்டி, அரசு புது காலனி பகுதியில் நிழற் குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு அத்தொகுதி எம்.எல்.ஏ.வும் தமிழக சட்டப்பேரவை பாஜக குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ நான் அமைச்சராக இருந்தபோது திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி இருக்கிறேன். பாளையங்கோட்டை பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை ராமையன்பட்டி பகுதியில் கால்நடை கல்லூரியையும் கொண்டு வந்திருக்கிறேன். திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மானூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன். 

இதையும் படிங்க: ஓபிஎஸ் மகனை ஏன் நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய ‘முரசொலி’.. கட்சியை விட்டு தூக்கி பதிலடி கொடுத்த இபிஎஸ்.!

அதை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உடனே அனுமதி வழங்கி கல்லூரியும் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சுத்தமல்லி பகுதியில்  கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவில் இரு தரப்புக்கும் சண்டை நடந்து வந்ததால்தான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன். பாஜகவை பொறுத்தவரை அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அதிமுகவின் கோஷ்டி பூசல் விவகாரம் பாஜகவுக்கு வருத்தம் அளிக்கிறது. அதிமுகவில் உள்ள இரு தரப்பில் யாருக்கும் பாரதிய ஜனதா கட்சி சாதகமாக செயல்படவில்லை. அதிமுக கட்சி தலைமை அலுவலகம் அருகே நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நடக்காமல் திமுக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: பொன்னையன் ஆடியோ.. கே.பி. முனுசாமி குவாரி எடுத்திருக்கிறாரா.? உண்மையை போட்டு உடைத்த துரைமுருகன்!

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கும் அளவுக்கு திமுக அரசு சென்றிருக்கக் கூடாது. தமிழகத்தில் திமுகவுக்கு எதிர்க்கட்சியாகவே பாரதிய ஜனதா கட்சி உள்ளது.  எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க எண்ணிக்கை தேவை இல்லை. ஒருவருடைய எதிர்ப்பு இருந்தாலும் அது எதிர்ப்புதான். அதிமுக வலுவாக இருக்க வேண்டுமென்றால், இணைந்த கைகளாக இருந்தால்தான் நல்லதாக இருக்கும். அதிமுகவுக்கு தலைமை யார் வந்தாலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை தட்டித்தூக்கிய ஓபிஎஸ்ஸின் தர்மயுத்த தளபதிகள்.. இபிஎஸ்ஸின் மூவ் என்ன.?

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!