மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல.. மன்னராட்சி முறையை கொண்டுவர துடிக்கிறீர்களோ? மோடியை வச்சு விளாசும் கமல்.!

Published : Jul 15, 2022, 06:38 AM ISTUpdated : Jul 15, 2022, 06:42 AM IST
மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல.. மன்னராட்சி முறையை கொண்டுவர துடிக்கிறீர்களோ? மோடியை வச்சு விளாசும் கமல்.!

சுருக்கம்

நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஊழல், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், வாய்ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, சர்வாதிகாரி உள்ளிட்ட வார்த்தைகளை எல்லாம் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்று பட்டியலிட்டு, மக்களவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் பேச்சுரிமைக்கு எதிரான இந்நடவடிக்கை, ஜனநாயக குரல்வளையை நசுக்கும். தவறுகளை சுட்டிக்காட்டவோ, விமர்சனம் செய்யவோ இடமளிக்காதது குடியரசையும், அரசியலமைப்பையும் கேலிக்கூத்தாக்கும் செயல் என கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஊழல், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், வாய்ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, சர்வாதிகாரி உள்ளிட்ட வார்த்தைகளை எல்லாம் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்று பட்டியலிட்டு, மக்களவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- சங்கி மட்டும் இல்லை ஆனா துரோகம், ஊழல், நாடகம் இருக்குது; வம்பு இழுத்த மஹூவா மொய்த்ரா

இந்த வார்த்தைகளை எம்.பி.க்கள் பயன்படுத்தினால், அவைக் குறிப்பில் இருந்து நீக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேச்சுரிமைக்கு எதிரான இந்நடவடிக்கை, ஜனநாயக குரல்வளையை நசுக்கும். தவறுகளை சுட்டிக்காட்டவோ, விமர்சனம் செய்யவோ இடமளிக்காதது குடியரசையும், அரசியலமைப்பையும் கேலிக்கூத்தாக்கும்.

இதையும் படிங்க;- ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நான் சொன்ன யோசனை செயல்வடிவம் பெற்றுவிட்டது.. அன்புமணி ராமதாஸ்..!

பிரதமர், அமைச்சர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று கருதுவது ஆபத்தானது. பாராட்டுகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க மன்னராட்சி முறை நடக்கிறதா? வள்ளுவரைப் பற்றிப் பேசும் பிரதமருக்கு 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' கதியை சுட்டிக்காட்ட யாருமில்லையா? ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே! என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- கேரளாவை சேர்ந்த ஒருக்கு குரங்கு அம்மை... தடுப்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!