ஏட்டிக்கு போட்டி... ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்... ஓபிஎஸ் அறிவிப்பு!!

Published : Jul 14, 2022, 10:46 PM IST
ஏட்டிக்கு போட்டி... ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்... ஓபிஎஸ் அறிவிப்பு!!

சுருக்கம்

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் 22 பேரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் 22 பேரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கியுள்ளார். கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்திலும், எடப்பாடி பழனிசாம் கே.பி.முனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜக்கையன், ஆர்.பி உதயக்குமார், செங்கோட்டையன்,நத்தம் விஸ்வநாதன், வேலுமணி,ஜெயக்குமார், வளர்மதி,கோகுல இந்திரா,ஆதிராஜாராம், தி.நகர் சத்யா,விருகை ரவி,அசோக், சி.வி.சண்முகம், கந்தன், இளங்கோவன், செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், ராஜன் செல்லப்பா ஆகிய 22 பேர் இன்று முதல் நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் M.P, உட்பட பன்னீர் ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியில் இருந்து நீக்கம்.. EPS அதிரடி.

மேற்கண்ட அனைவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாகவும், கட்சி உறுப்பினர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மகனை ஏன் நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய ‘முரசொலி’.. கட்சியை விட்டு தூக்கி பதிலடி கொடுத்த இபிஎஸ்.!

முன்னதாக அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 18 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், வெல்லமண்டி நடராஜன், சையது கான், எஸ்.ஏ.அசோகன், ஓம் சக்தி சேகர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்சியினர் யாரும் நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்றும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!