திமுக தொழில் நுட்ப பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டிருந்தது.
பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் உலக அளவில் பிரபலமான சமூக வலைத்தளங்கள் என பெயரெடுத்தவை. இந்த வலைத்தளங்கள் இல்லாமல் வாழ்க்கை என்றே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
உணவருந்தும் நேரங்களில் கூட மொபைலை கையில் வைத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் உலவும் பழக்கத்திற்கு பலரும் அடிமைகளாக கூட மாறிவிட்டனர். தற்போதைய நவீன காலத்தில் கட்சிகளுக்கும் சமூக வலைத்தளங்கள் ஓட்டுக்களை தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருப்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.பாஜக,காங்கிரஸ்,திமுக,அதிமுக என எல்லா கட்சிகளும் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !
இந்நிலையில் திமுக தொழில் நுட்ப பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக என எதிர்கட்சிகள் வரிசையாக திமுகவின் ஐடி விங் பக்கத்தை கலாய்த்து தள்ளினர். தற்போது மீண்டும் திமுக ஐடி விங் பக்கம் செயல்பட ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதை குறித்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், தொழில் நுட்ப பிரிவின் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.. ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!
சந்தான பாரதிக்கும் அமிட் ஷாவுக்கும் வித்தியாசம் தெரியாத சங்கி மந்திகளுக்கு tech glitchக்கும் suspensionக்கும் வித்தியாசம் தெரியாதது விந்தை இல்லை😂 twitter team hit a glitch during a new system migration.Our team is in touch with to ensure rectification asap 👍🏽
— Dr. T R B Rajaa (@TRBRajaa)அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘சந்தான பாரதிக்கும் அமிட் ஷாவுக்கும் வித்தியாசம் தெரியாத சங்கி மந்திகளுக்கு tech glitchக்கும் suspensionக்கும் வித்தியாசம் தெரியாதது விந்தை இல்லை’ என்று பதிவிட்டுள்ளார். டி.ஆர்.பி ராஜாவின் இந்த பதிவு அதிமுக, பாஜக போன்ற கட்சிகளுக்கு விமர்சிக்கும் விதமாக வெளியிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..கைலாசா ஆண்டவர் மீண்டும் வருகிறார்.. நித்யானந்தா ரிட்டர்ன்ஸ்.! பக்தர்களே ரெடியா.!