கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் உள்ள சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி ஆகியோர் இன்று முதல் அவர்களது வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் உள்ள சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி ஆகியோர் இன்று முதல் அவர்களது வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூடுதல் தலைமை கழக செயலாளராக நியமித்தும் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி. பொன்னையன், திரு நத்தம் விசுவநாதன், எஸ்.பி வேலுமணி எம்எல்ஏ அவர்கள் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூடுதல் தலைமை கழக செயலாளர்களாக கீழ்க் கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்...
இதையும் படியுங்கள்: உங்கள் கட்டளையை சிரமேற்று செய்வேன்.. பொது.செ வாக நியமித்த தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி உருக்கமாக நன்றி.
1.கழக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி (முன்னாள் அமைச்சர்)
2.நத்தம் விசுவநாதன் அவர்கள் (திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்)
3.அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர்- பொன்னையன் ( கழக செய்தி தொடர்பாளர் முன்னாள் அமைச்சர்)
4.கழக தலைமை நிலைய செயலாளர்- எஸ் பி வேலுமணி (கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்)
கழக அமைப்புச் செயலாளர்கள்- செல்லூர் கே ராஜூ (மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர்)
5.சிவி சண்முகம் (விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்)
6.பா தனபால் (தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் சட்டமன்ற உறுப்பினர்)
7.கே.பி அன்பழகன் (தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்)
8.ஆர்.காமராஜ் (திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்)
9.ஓ.எஸ் மணியன் (நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்)
10.கடம்பூர் சி.ராஜ் (தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் )
11.கே.டி ராஜேந்திர பாலாஜி (விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்)
12.பெஞ்சமின் (திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்)
13.பாலகங்கா (வடசென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் வாரியத் தலைவர்)
கழக உடன்பிறப்புகள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: "அப்படியே அவர் சொல்லியிருந்தாலும், அவரின் வயது காரணமாக அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை" - சி.வி.சண்முகம்