திமுகவினர் பட்டாசு வெடித்ததில் எம்ஜிஆர் சிலை எரிந்தது.. எம்ஜிஆர் சிலை காலைத்தொட்டு திமுக நிர்வாகி மன்னிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Mar 2, 2021, 10:43 AM IST
Highlights

இதனால் சிலை முழுக்க தீ பரவி சிலை பற்றி எரிந்தது, இதை கண்ட அதிமுகவினர் கொந்தளிப்படைந்தனர். உடனே இதனை கண்டித்து அதிமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் காலை 11 மணி அளவில் சாலை மறியல் நடைபெற்றது. 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் திமுகவினர் பட்டாசு வெடித்ததில் எம்ஜிஆர் சிலை மீது தீப்பொறி பட்டதில், சிலை தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் மத்தியில் எம்ஜிஆர் சிலை காலைத்தொட்டு திமுக நிர்வாகி மன்னிப்புக் கேட்டுள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே நேற்று காலை சுமார் 10 மணி அளவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அங்கிருந்த இருந்த எம்ஜிஆர் சிலை அருதில் பட்டாசு வெடித்ததில் தீப்பொறி எம்ஜிஆர் சிலை மீது விழுந்து. இதனால் சிலை முழுக்க தீ பரவி சிலை பற்றி எரிந்தது, இதை கண்ட அதிமுகவினர் கொந்தளிப்படைந்தனர். உடனே இதனை கண்டித்து அதிமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் காலை 11 மணி அளவில் சாலை மறியல் நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் திமுக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், சம்பவம் குறித்து கந்திலி ஒன்றிய திமுக பொருளாளர் நாகராஜன் என்பவர், எம்ஜிஆரின்  திருவுருவச் சிலையின் காலைதொட்டு  வணங்கி பகிரங்கமாக மன்னிப்புக் மன்னிப்பு கேட்டார். அதனைத்தொடர்ந்து அதிமுக திமுகவினர் இடையே நடந்த பிரச்சனை தீர்வுக்கு வந்தது. அதனுடைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவி வைரலாகி வருகிறது.  

 

click me!