முருகனிடம் சரணாகதியான திமுக.. ஸ்டாலினுக்காக திருப்பரங்குன்றத்தில் தங்க தேர் இழுத்து பிறந்தநாள் வழிபாடு.

By Ezhilarasan BabuFirst Published Mar 2, 2021, 10:14 AM IST
Highlights

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. முருகப்பெருமானுக்கு வேண்டுதல் வைத்து பக்தர்கள் காணிக்கை செலுத்தி கோயிலின் தங்கத் தேரை வடம் பிடித்து இழுப்பர். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கத் தேர் இழுத்து திமுகவினர் வழிபாடு செய்தனர். 

திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக நடந்தும், பேசியும் வருவதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டு வரும் நிலையில் திமுகவினரின் இந்த வழிபாடு அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினின் 68 வது பிறந்த தினம் அக்கட்சி தொண்டர்களால் தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல இடங்களில் பல்வேறு விதங்களில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த வரிசையில், மதுரை தனக்கன் குளம் நேதாஜி நகர் திமுக கிளைக் கழகம் சார்பில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கத் தேர் வடம் பிடித்து உள் பிரகாரம் சுற்றி வந்து அவரது தொண்டர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. 

முருகப்பெருமானுக்கு வேண்டுதல் வைத்து பக்தர்கள் காணிக்கை செலுத்தி கோயிலின் தங்கத் தேரை வடம் பிடித்து இழுப்பர். அந்த வகையில், நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி, தனக்கன் குளம் ஊராட்சி, நேதாஜி நகர் கிளைக் கழகம் சார்பில், ஒன்றியச் செயலாளர் பெரியசாமி, தனக்குளம் ஊராட்சித் தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட திமுகவினர், மாவட்டச் செயலாளர் மணிமாறன் வழிகாட்டுதலின் படி தங்கத் தேர் வடம் பிடித்து இழுத்துக் காணிக்கை செலுத்தி முருகப்பெருமானுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 68வது பிறந்த நாளில் வேண்டுதல் நிறைவேற்றினர். 

இது பாஜக உள்ளிட்ட கட்சிகளால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் நாத்திகம் என்ற பெயரில் இந்து மதத்தை தொடர்ந்து அவமரியாதை  செய்யும் வகையில் நடந்து வருகிறார். ஆனால் தேர்தலை மையமாக வைத்து இப்போது முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திமுகவினர் வழிபாடு நடத்தி இருப்பது வாக்கு அரசியலுக்கான நாடகம் என விமர்சித்து வருகின்றனர்.  முன்னதாக தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினுக்கு அவரது கட்சி தொண்டர்கள் வேல் பரிசு வழங்கியதும் குறிப்பிடதக்கது.  

 

click me!