தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டி... ஒவைசி அதிரடி அறிவிப்பு... திமுகவுக்கு சாதகமா? பாதகமா?

By vinoth kumarFirst Published Mar 2, 2021, 10:38 AM IST
Highlights

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அசாதுதீன் ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். 

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அசாதுதீன் ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். 

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்டுள்ளது அகில இந்திய மஜ்லிஸ் கட்சி. இருப்பினும், தெலுங்கானா, ஆந்திரா தவிர்த்து, பிற மாநிலங்களிலும் இந்த கட்சிக்கு செல்வாக்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் கணிசமான தொகுதிகளில் இந்த கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. பீகாரில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு 5 தொகுதிகளை வென்று அதிர்ச்சி கொடுத்தது. 

இந்நிலையில். சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் போட்டியிடப்போவதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார். இரு மாநிலங்களிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய முஸ்லிம் லீக் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள் உள்ளன. ஆனால் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, சிறுபான்மையின மக்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டால் அது திமுக கூட்டணிக்கு பாதகமாக மாறி விடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 

click me!