PA மூலம் OPS கொடுத்து அனுப்பிய கடிதம் வந்து சேர்ந்துச்சு.. ஆக்ஷன் எடுப்பேன்... மாஸ் காட்டிய அப்பாவு.

Published : Jul 14, 2022, 02:35 PM ISTUpdated : Jul 14, 2022, 02:43 PM IST
PA மூலம் OPS கொடுத்து அனுப்பிய கடிதம் வந்து சேர்ந்துச்சு.. ஆக்ஷன் எடுப்பேன்... மாஸ் காட்டிய அப்பாவு.

சுருக்கம்

எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதம் பரிசிலீனையில் உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  

எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதம் பரிசிலீனையில் உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் வந்து சேர்ந்தது என்றும் அது பரிசீலனையில் உள்ளது என்றும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்பாவிற்கு உறுதியளித்துள்ளார். மேலும் அரசியல் விருப்பு வெறுப்பின்றி சட்ட விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதாக அறிவித்ததுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் நீக்க உள்ளதாக தகவல் வருகிறது, எனவே சட்டமன்ற குழுவை மாற்றியமைக்கும் வகையில் கடிதம் வந்தால் அதை நிராகரிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் அப்பாவுக்கு கடிதம் எழுதிய நிலையில், அப்பாவு இவ்வாறு கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஆளுநர் மாளிகையில் நீட் மசோதா..! காலம் தாழ்த்தும் கவர்னர்.. சட்டபேரவையை அவமதிக்கும் செயல் -அப்பாவு

அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். அதில் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும்  இதற பதிவிகளில் இருந்து அவரது சகாக்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றி அங்கிருந்த ஆவணங்களை அள்ளிச் சென்றார். இதனால் ராயப்பேட்டையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. அதன்  எதிரொலியாக அதிமுக அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதேநேரத்தில் ஓ பன்னீர்செல்வம் தன்னை பொருளாளர் பதவியில் இருந்து யாரும் நீக்க முடியாது என்றும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் கட்சி தொடர்பான கணக்கு வழக்குகளை பொருளாளராகிய தனது அனுமதியின்றி யாரும் கையாள முடியாது என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் 11ஆம் தேதி நடந்து முடிந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள் கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும், எனவே அதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது என்றும் அவர் கடிதம் எழுதி உள்ளார். மேலும் பன்னீர்செல்வத்தை சட்ட மன்ற துணைத் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் ஒன்று எழுதியுள்ளார், அதில்  பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் நிலுவையில் இருப்பதால், சட்டமன்றக் குழுவை மாற்றி அமைக்கும் வகையில் கடிதம் வந்தால் அதை நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: nirmala sitharaman: தலைமைப் பொருளாதார ஜோதிடரை நியமியுங்கள்: நிர்மலாவை வம்பிழுத்த ப.சிதம்பரம்

இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை சட்டப்பேரவையில் உள்ள தனது அறையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது உதவியாளர் மூலமாக கொடுத்து அனுப்பிய கடிதம் வந்து சேர்ந்தது. ஆனால் இதுவரையில் அதன் மீது எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை, தற்போது கடிதம் பரிசீலனையில் உள்ளது, ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து இதுவரை எந்த கடிதமும் வரவில்லை, ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் தொடர்பாக சட்ட விதிப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பேன். இதில் எந்தவிதமான  விருப்பு வெறுப்பு இல்லாமல் ஜனநாயக முறைப்படி நியாயமான முறையில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என அவர் கூறினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!