ஆளுநர் மாளிகையில் நீட் மசோதா..! காலம் தாழ்த்தும் கவர்னர்.. சட்டபேரவையை அவமதிக்கும் செயல் -அப்பாவு

By Ajmal KhanFirst Published Jul 14, 2022, 2:05 PM IST
Highlights

சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதம் தொடர்பாக இதுவரை  எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சபாநாயகர் அப்பாவு விளக்கம் கொடுத்துள்ளார். 
 

 நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்யும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வு மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிய நிலையில் அந்த மசோதா நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து திமுக அரசு பதவியேற்றதும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. மசோதாவில் உரிய விளக்கம் இல்லையெனக்கூறி ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியிருந்தார். இதனையடுத்து தமிழக அரசு மீண்டும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு மசோதாவை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தது. இதற்காக ஆளுநர் கொடுத்த விருந்தை திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்து இருந்தன.

நீட் மசோதா மத்திய அரசுக்கு அனுப்பவில்லையா.? ஆளுநர் மாளிகையில் தான் கிடப்பில் உள்ளதா..! ராஜ்பவனில் புது சர்ச்சை

இதனையடுத்து தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற போது தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தாக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் கடந்த மே மாதம் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் நீட் சட்டம் தொடர்பாக எழுப்பட்ட வினாக்களுக்கு  நேரடியாக பதில் அளிக்க ஆளுனர் மாளிகை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும்  நீட் விலக்கு சட்டம் உரிய அதிகார நிலையில் உள்ளவரால், தொடர் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என ஆளுனர் மாளிகை கூறியிருந்தது. எனவே நீட் மசோதாவை தமிழக ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பினாரா? என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்தநிலையில் தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், ஓ.பன்னீர்செல்வம் உதவியாளர் மூலமாக கொடுத்தனுப்பிய கடிதம் தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தற்போது கடிதம் பரிசிலீனையில் இருப்பதாவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து இதுவரை  எந்த கடிதமும் வரவில்லை என்றும் கூறினார். 

 

ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதம் தொடர்பாக சட்ட விதிப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பேன் என்றும் எந்தவிதமான வெறுப்பு வெறுப்பு இல்லாமல் ஜனநாயக முறைப்படி நியாயமான முறையில் பரிசளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பாவு தெரிவித்தார்.   தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா உள்பட மசோதக்களை ஆளுநர் விரைந்து  குடியரசு தலைவர் மற்றும் மத்திய அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைப்பது  மக்களை அவமதிக்கும் செயல் என்றும்  சபாநாயகர் கூறினார்.

இபிஎஸ் நியமித்த நிர்வாகிகள் செல்லாது..! தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்

click me!