கோயில் நகைகளை உருக்க கூடாது.. நீதி மன்றம் போட்ட அதிரடி நிபர்ந்தனை. ஆடிப்போன இந்து அறநிலையத்துறை.

By Ezhilarasan BabuFirst Published Oct 28, 2021, 5:30 PM IST
Highlights

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கோவில் நகைகளை உருக்கவில்லை என்றும், காணிக்கையாக வந்த நகைகளை தான் உருக்கப்படுவதாகவும், அதை மேற்பார்வையிடுவதற்கு உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவரும் அடங்கிய குழு அமைத்து நகைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக குறிப்பிட்டார்.

தமிழக கோவில்களில் உள்ள நகைகள் அறங்காவலர்கள் நியமனத்திற்கு பின்னரே உருக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.  கோவில் நகைகளை விற்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்ட வழக்கில் தமிழக அரசு நீதிமன்றத்தில் இவ்வாறு உத்தரவாதம் அளித்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு  அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அரசு வெளியிட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள், புதிய அறிவிப்புகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுவருகிறது, குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பல முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை, கோவில்களில் அன்னதான திட்டம், பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி வருமானத்திற்கு வழி செய்வது பல என அதிரடி திட்டங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்பது, இந்து அறநிலை துறையில் வரும் வருமானத்தை வைத்து கல்லூரிகள் அமைப்பது என அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில் ஆரம்பம் முதலே கோயில் தொடர்பாக திமுக அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன, குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்புக்கு எதிராக பாஜக உள்ளிட்ட இந்து இயக்க ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்,

இதையும் படியுங்கள்: சசிகலாவை ஆதரிப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.. ஓபிஎஸ்சை ஓங்கி அடித்த ஜெயக்குமார்.

அதேபோல் புழக்கத்தில் இல்லாத  நகைகள் உருக்கப்பட்டு, அதை தங்க கட்டிகளாக மாற்றி, வங்கிகளில் முதலீடோ செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை அறநிலை பணிக்கு பயன்படுத்தும் முயற்சியை இந்து அறநிலைத்துறை முன்னெடுத்துள்ளது. ஆனால்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கோயில் நகைகளை உருக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறைக்கு இல்லை, அப்படி நகைகள் உருக்கப்படும் போது அதில் ஊழல் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இதை இந்து அறநிலையத்துறை கைவிடவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

 

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்வது, கோவில் உபரி நிதியில் கல்லூரி துவங்குவது உள்ளிட்ட 112 அறிவிப்புகள் தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அறிவிப்புகளின் படி கோவிலில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே இந்த உத்தரவுக்கு எதிராக இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை மற்றும் டி.ஆர் ரமேஷ் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில் கோயில் தங்க நகைகளை உருக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. அந்த மனுவின் மீதான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது,

இதையும் படியுங்கள்: டிடிவியுடன் 11 வருஷம் ஒன்னும் மண்ணுமா இருந்தவன் நான்.. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா..

அப்போது விதிகளின்படி ஒரு கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் கோயிலுக்குச் சொந்தமான தங்க நகைகளை உருக்க அனுமதிக்கக் கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கோவில் நகைகளை உருக்கவில்லை என்றும், காணிக்கையாக வந்த நகைகளை தான் உருக்கப்படுவதாகவும், அதை மேற்பார்வையிடுவதற்கு உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவரும் அடங்கிய குழு அமைத்து நகைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக குறிப்பிட்டார். 

அதேபோல், ஏற்கனவே உருக்கிய நகைகளின் கட்டிகளை வங்கிகளில் முதலீடு செய்ததன் மூலம் 11.5 கோடி ரூபாய் வட்டி வருவாயாக கிடைத்துள்ளதாகவும், அது கோவில் நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். கோவில்களை சீரமைக்க நிதி தேவைப்படுவதாகவும், கடந்த 11 ஆண்டுகளாக தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். அப்போது  குறுக்கிட்ட நீதிபதிகள் அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது எனக் கூறினர். இதையடுத்து நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கோயிலுக்கு காணிக்கையாக நகைகளை உருக்கலாம் எனவும், அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர். மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மற்ற மனுக்களுடன் சேர்த்து டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 
 

click me!