சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதிமுகவுக்கான வாக்குவங்கி சரிந்தது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டம் வந்த போது சட்டத்திற்கு ஆதரவாக முகம்மது ஜான் எம்.பியை வற்புறுத்தினார்கள். அவரை வற்புறுத்தியது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்.
சசிகலாவுக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் செயல்பட்ட அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர் ஜே.எம்.பஷூர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சசிகலாவை அதிமுகவுக்குள் சேர்ப்பது குறித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பற்ற வைத்த நெருப்பு காட்டுத் தீ போல அதிமுகவில் எரிந்து வருகிறது. சசிகலாவை சேர்ப்பது குறித்த ஓ.பன்னீர் செல்வத்தின் கருத்துக்கு ஜெயக்குமார், கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகளான ஜேசிடி.பிரபாகர், செல்லூர் ராஜூ அடுத்தடுத்து செய்தியாளர் சந்தித்து ஓபிஎஸ் பேசியதில் எந்த தவறும் இல்லை என கூறி, அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
undefined
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர் ஜே.எம்.பஷூர்;- சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதிமுகவுக்கான வாக்குவங்கி சரிந்தது. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டம் வந்த போது சட்டத்திற்கு ஆதரவாக முகம்மது ஜான் எம்.பியை வற்புறுத்தினார்கள். அவரை வற்புறுத்தியது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்.
இதையும் படிங்க;- #BREAKING 6 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குதா? நம்ப முடியாதவர்களும் நம்பித்தான் ஆக வேண்டும்.!
எடப்பாடி பழனிசாமி எனும் தனிமனிதன் முதலமைச்சராக தொடர வேண்டும் என்பதற்காக முகம்மது ஜான் வாக்களித்தார். ஆனால் அவர் மறைவுக்கு பிறகு ஆறுதல் கூட எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. இன்றைக்கு வந்த திமுக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். இஸ்லாமியர்களுக்கு எதிராக துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அவர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார். இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் மீது அடுக்கான புகார்களை தெரிவித்த ஜே.எம்.பஷூர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க;- ஆடிட்டர் குருமூர்த்தி மீதான புகார்.. ஆறப்போட்ட அதிமுக.. அதிரடி காட்டிய திமுக..!
இதையும் படிங்க;- அதிமுக சுக்குநூறாய் தகர்ந்துவிடும்... எடப்பாடி -சசிகலாவுக்கு ஜெ. உதவியாளர் எச்சரிக்கை..!
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தை சேர்ந்த ஜே.எம்.பஷீர் (சிறுபான்மையினர் நலப் பிரிவு துணை செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- மாமியாருடன் அடிக்கடி உல்லாசம்.. எவ்வளவு சொல்லியும் கன்டினியூவான கள்ளக்காதல்.. இறுதியில் மருமகன் செய்த காரியம்