கிரண்பேடிக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்... பாஜக கொடுக்கப்போகும் முக்கிய பொறுப்பு..!

By Thiraviaraj RMFirst Published Feb 20, 2021, 1:04 PM IST
Highlights

கிரெண்பேடி அடுத்து பாண்டிச்சேரி பாஜாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்  அல்லது, டெல்லி ஆளுநராக நியமிக்க படுவார் என்றும், மேற்கு வங்க ஆளுநராகவோ அல்லது மஹாராஷ்டிர ஆளுநராக நியமிக்க படுவார் எனக் கூறப்படுகிறது. 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய 3 வடமாநில ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து கிரண்பேடி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கடந்த 16ஆம் தேதி கிரண்பேடி நீக்கப்பட்டார். இந்த நிலையில், பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு முந்தைய நாள், துணைநிலை ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய 3 வடமாநில ஊழியர்களை மட்டும் பணிநிரந்தரம் செய்து கிரண்பேடி உத்தரவிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பல மாத ஊதிய நிலுவையிலும், பதவி உயர்வு இல்லாமலும் பணியாற்றிவரும் நிலையில், திடீரென வடமாநில ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாண்டிச்சேரி ஆளுநர் பதவியிலிருந்து விடுவிக்க பட்டிருக்கிற கிரெண்பேடி அடுத்து பாண்டிச்சேரி பாஜாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்  அல்லது, டெல்லி ஆளுநராக நியமிக்க படுவார் என்றும், மேற்கு வங்க ஆளுநராகவோ அல்லது மஹாராஷ்டிர ஆளுநராக நியமிக்க படுவார் எனக் கூறப்படுகிறது. 

click me!