அதிர்ச்சி. பழி தீர்க்க குடிநீரில் விஷம் கலந்த கொடூரன்.. 6 ஆயிரம் உயிர்கள் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 20, 2021, 12:35 PM IST
Highlights

இந்நிலையில் இரண்டு கோழிப்பண்ணைகளை கடந்த 45 நாட்களுக்கு முன்பு  ராஜன் என்பவருக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் இன்று ராஜன் கோழிப்பண்ணை வந்த போது அங்கிருந்த சுமார் 6 ஆயிரம் கோழிகள்  மர்ம்மான முறையில் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச் சியடைந்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம்  ஆரல்வாய்மொழி அருகே கோழிப்பண்ணையில் முன்விரோதம்  காரணமாக தண்ணீரில் விஷம் கலந்ததால் 6 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில்  சுரேஷ் என்பவருக்கு சொந்தமாக 4 கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் இரண்டு கோழிப்பண்ணைகளை கடந்த 45 நாட்களுக்கு முன்பு  ராஜன் என்பவருக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் இன்று ராஜன் கோழிப்பண்ணை வந்த போது அங்கிருந்த சுமார் 6 ஆயிரம் கோழிகள்  மர்ம்மான முறையில் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடை ந்துள்ளார். இங்கு ஏற்கனவே கோழிப்பண்ணை நடத்தி வந்த துவரங்காடு  பகுதியை சேர்ந்த சாஜன் என்பவர் கோழி தீவனங்களை  திருடியதாக கூறி நீக்கப்பட்டதாகவும்.  

அவர் இந்த   முன்விரோதம்  காரணமாக கோழிகளுக்கு  வைக்கப்படும் தண்ணீர் டேங்க்கில் நள்ளிரவில் விசம் கலந்ததும் தெரியவந்துள்ளது. இதில் சுமார் 6 ஆயிரம் கோழிகள் உயிரழந்துள்ளன. இச்சம்பவம் குறித்து ராஜன் அளித்த புகாரின்  பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள  சாஜனை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரே நேரத்தில் விஷம் கலந்த தண்ணீரை குடித்து 6 ஆயிரம் கோழிகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.  

 

click me!