தலைவிரி கோலமாய் அழுது புலம்பும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி... குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்த போலீஸ்..!

By Thiraviaraj RMFirst Published Feb 20, 2021, 12:34 PM IST
Highlights

காந்தி சிலையை உடைக்க முற்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கைது: நடிப்பில் ஸ்டாலினை ஓரங்கட்டி விட்டார்.!

காந்தி சிலையை உடைக்க முற்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை போலீசார் கைது செய்தனர். கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட காந்தி சிலை இருந்தது. அந்த சிலை சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டு வேறு காந்தி சிலை வைக்கப்பட்டது. அப்போது காந்தி சிலை வைக்கப்பட்ட பீடத்தின் கட்டுமானப்பணிகள் சரியாக இல்லை என்று கூறி காந்தி சிலை கட்டுமானப்பணிகளை உடைக்க முற்பட்டார் ஜோதிமணி. அவருடன் காங்கிரசாரும் சேர்ந்து கொண்டு கட்டுமான பணிகளை தடுத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தக்கூடாது எனவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் உடனே கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தியதால் ஜோதிமணியை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீஸ் வாகனத்தில் ஜோதிமணியை ஏற்றும்போது தலைமுடி கலையாமல் உள்ளது. அவரை பெண் காவலர்கள் தூக்கி செல்கின்றனர். இதன் பின்னர் வாகனத்தின் உள்ளே சீட்டில் அமர்ந்த ஜோதிமணியின் தலைமுடி கலைந்துள்ளது. எப்படி உள்ளே சென்றதும் கலைந்துள்ளது என யோசிக்க வேண்டாம். இது அனைத்தும் ஜோதிமணி தேர்தலுக்கா நடத்தும் நாடகம் என கரூர் அதிமுகவினர் குற்றம்சாட்டினர். 

கரூரில் 70 ஆண்டுகள் முன் நிறுவப்பட்ட காந்தி சிலையை அகற்றியுள்ளார்கள். பணி ஆணை கேட்டு போராடிய கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கிறது அதிமுக அடிமை அரசு! (Strong Condemnation to TN Police) pic.twitter.com/ng3ewVWjSZ

— A.M.S. Diraviaraj. (A.Mariya Soosai Thiraviaraj) (@ADiravia)

 

click me!