மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கேட்டது 1977 கோடி! ஆனா மத்திய அரசு கொடுத்தது 12 கோடி-RTIயில் வெளியான அதிர்ச்சி

By Ajmal Khan  |  First Published Feb 27, 2023, 1:18 PM IST

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட  1977 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை 12 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
 


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை

டெல்லியில் உயர்தர வசதியோடு செயல்பட்டு வரும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை போன்று தமிழகத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சி சார்பாக தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மதுரை, கோவை, நெல்லை, திருச்சி என பல இடங்களில் இடம் தேர்வு நடைபெற்ற நிலையில் மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் உயர் மருத்துவ வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை 750 ஏக்கர் படுக்கைகளுடன் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த பணி விரைவாக முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்பட்டது.

Latest Videos

அமைச்சரானதும் முதல் முறையாக டெல்லிக்கு சென்ற உதயநிதி..! மோடியை சந்திக்க திட்டமா.? ஆச்சர்யத்தில் பாஜக

மத்திய அரசு ஒதுக்கிய நிதி.?

ஆனால் கடந்த 5 வருடங்களாக எந்த பணியும் நடைபெறாத நிலைதான் நீடித்து வந்தது. இதனை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவை திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வந்தது. இந்தநிலையில் நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் மனு தாக்கல் செய்து கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நாடு முழுவதும் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன் படி உத்தரபிரதேஷ், ஆந்திரா, மஹாராஸ்டிரா உள்ளிட்ட 7 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டிஐயில் வெளியான அதிர்ச்சி தகவல்

அஸ்ஸாம் மற்றும் ஜம்முவில் இந்த ஆண்டில் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது. அதில் குஜராத் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 1195 கோடி மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் 622 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 1365 கோடி மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், 156 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு

தமிழகத்தை பொறுத்தவை 1977 கோடி ரூபாய் என திட்ட மதிப்பீடு வெளியிடப்பட்ட நிலையில் 12.35 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை எய்ம்எஸ் கட்டுமான பணி 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடையும் எனவும் அந்த ஆர்டிஐ தகவலில்  கூறப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

பாஜக நிர்வாகி குஷ்புவுக்கு முக்கிய பதவி வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு..

click me!