அறிவே இல்லாதவர் அறநிலையத்துறை அமைச்சர்... சேகர்பாபுவை மிக மோசமாக விமர்சித்த ஹெச்.ராஜா..!

By vinoth kumar  |  First Published Nov 6, 2021, 12:18 PM IST

அறநிலையத்துறை தனது வரம்புமீறி செயல்படுகிறது. கோவில்களை அறநிலையத்துறை அரசு எடுத்துக்கொள்வதை நிறத்தாவிட்டால் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். 


துறை ரீதியான ஞானம் இல்லாதவராக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளார் என பாஜக முன்னாள் தேசிய செயலர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஹெச். ராஜா கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைந்துள்ளது.  மத்திய அரசு தனது கலால் வரி குறைத்துள்ளது. பாஜக ஆளும் 9 மாநிலங்களின் அரசுகள் குறைந்துள்ளது. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறி ஆட்சியைப் பிடித்த ஊராட்சி அரசு தனது மாநில அரசு வரியை குறைத்து தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- எங்கு அபயக்குரல் கேட்டாலும் கந்தன்போல் அங்கு முதல்வர் காட்சி தருவார்.. அமைச்சர் சேகர்பாபு வேற லெவல்!

கோவில் அபகரிப்பில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்து ஐந்தரை மாதங்களில் பல்வேறு கோவில்களை அரசு எடுத்துக் கொண்டுள்ளது. அறநிலையத்துறை துறை சட்டம் 1953இன்படி செயல்படுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். அறநிலையத்துறை ஒரு கோவில் சரியாக நிர்வாகம் செய்யப்படவில்லை என்றால் எடுத்து சரி செய்து அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் பழைய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், 60 ஆண்டுகள் 70 ஆண்டுகள் கோவிலை அபகரித்துக் கொண்டு நகைகளை கபளிகரம் செய்யக்கூடாது. அதனால் சட்டப்படி அறநிலையத்துறை கோவில்களை எடுத்துக்கொள்ள முடியாது. 

இதையும் படிங்க;- பாஜக வழியில் செல்லுங்கள்.. முதல்வர் ஸ்டாலினை நெருக்கும் ஓபிஎஸ்..!

இதையும் படிங்க;- இந்து பண்டிகையில் தலையிட்டால் விளைவு வேற மாதிரி இருக்கும்.. மதவெறியர்களுக்கு ஹெச்.ராஜா பகிரங்க எச்சரிக்கை..!

அறநிலையத்துறை துறையின் கீழ் எத்தனை கோவில்கள் உள்ளன என்று கூட தெரியாத நிலையில் உள்ளார். நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வழக்கறிஞர் காத்திகேயன் 44,121 கோவில்கள் உள்ளதாக அப்போது தெரிவித்தார்.  ஆனால், சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் பாபு 38,667 கோவில் உள்ளதாக  கூறியுள்ளார். அப்படி என்றால் மீதி 5454 கோவில் எங்கே. தனது துறைரீதியான ஞானம் இல்லாத வராக அறநிலையத்துறை அமைச்சர் உள்ளார். அறநிலையத்துறை தனது வரம்புமீறி செயல்படுகிறது. கோவில்களை அறநிலையத்துறை அரசு எடுத்துக்கொள்வதை நிறத்தாவிட்டால் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஞானம் இல்லாதவர் என்பதின் அர்த்தம் அறிவே இல்லாதவர் என்பதையே குறிக்கிறது. 

click me!