இட ஒதுக்கீடு என்பதே சமூக அநீதி.. வன்னியர்களை உலுக்கும் நடிகை கஸ்தூரி.

By Ezhilarasan BabuFirst Published Nov 6, 2021, 12:17 PM IST
Highlights

என்னைப் பொறுத்த வரையில் நான் எல்லா இட ஒதுக்கீடுகளுக்கும் எதிரானவள், இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் எதிரானதுதான், அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நான்கு சமூகங்கள் தவிர மற்ற அனைத்து சாதியினரும் ஓபிசி பிரிவுகளில் தான் இருக்கிறார்கள். 

திமுக ஆட்சி ஓ.கே ரகம்தான் என்றும், என தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, 30 சதவீதம் செயல்பாடு என்றாலும் 70 சதவீதம் விளம்பரம் செய்வதில் வல்லமை படைத்தவர்கள் திமுகவினர் என்றும் அவர் விமர்சித்துள்ளதுளார். அதே நேரத்தில்  தன் அனைத்து இட ஒதுக்கீடுகளுக்கும் எதிரானவள் என்றும், இட ஒதுக்கீடு என்பதே சமூக நீதி சமத்துவத்திற்கு எதிரானது என்றும், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து அவர் விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, அரசின் ஒவ்வொரு அறிவிப்புகளையும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர், ஆனால் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் விமர்சித்தும், எதிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில் திமுக  ஆட்சி பொறுப்பேற்ற ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், திமுக ஆட்சியின் நிலவரம் எப்படி இருக்கிறது, தற்போது தமிழகத்தில் முக்கிய பேசுபொருளாக உருவெடுத்திருக்கும் வன்னியர்கள்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் தனது நிலைபாடு என்ன என்பன வற்றை நடிகையும், தொடர்ந்து அரசியல் களம் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருபவருமான கஸ்தூரி  தனியார் இதழுக்கு அளித்துள்ள பேட்டி பின்வருமாறு:- 

திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது தமிழகத்தின் கஜானா காலியாகிவிட்டது என்று கூறினர், ஆனால் அதை எல்லாம் சரி செய்தது அந்த சவால்களில் இருந்து மீண்டு வரும் வகையில் அவர்களின் செயல்பட்டுகள் சிற்ப்பாக உள்ளது. அதே நேர்த்தில் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களால் பெரும்பாலான வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது. மக்களும் கூட அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார். திமுகவின் செயல்பாடுகள் 30% இருந்தாலும்கூட அதை 70 சதவீதம் அளவிற்கு ஊடகங்களின் வாயிலாக விளம்பரப்படுத்தும் யுக்தி, அதற்கான  ஊடக கட்டமைப்பு அவர்களிடத்தில் இருக்கிறது என விமர்சித்துள்ளார். மொத்தத்தில்  திமுக அரசின் ஆட்சி என்று பார்த்தால் ஓகே ரகம்தான் என அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையெல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு இப்போது அவர்களின் கவனம் முழுக்க முழுக்க அவர்களின் சித்தாந்தத்தை பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர், அதற்காக சமூக நீதி கண்காணிப்புக்குழு என்று ஒன்றை ஆரம்பித்து அதில் அக்மார்க் திமுக கொள்கை பற்றி பேசி வரும் சு.ப.வீ உள்ளிட்டவர்களுக்கு பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள் என விமர்சித்துள்ள அவர், இந்த நேரத்தில் தமிழ்நாடு தினம் ஒன்றை ஆரம்பித்து அதிமுகவும் திமுகவும் எதிர் எதிர் கருத்துக்களை கூறி  அதை விவாதப் பொருளாக மாற்றியுள்ளனர், தமிழ்நாடு தினம் என்பது எல்லோரும் பெருமையாக கொண்டாடக்கூடிய தினம், ஆனால் திமுகவும் அதிமுகவும் இந்த விஷயத்தில் அடித்துக் கொள்வதை பார்த்தால் அந்தப் பெருமை அனைத்தும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது என கூறியுள்ளார். அதேபோல் அதிமுக ஆட்சியில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு திமுக ஆட்சியில் சட்டமாக நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்தது குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ள அவர்,

என்னைப் பொறுத்த வரையில் நான் எல்லா இட ஒதுக்கீடுகளுக்கும் எதிரானவள், இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் எதிரானதுதான், அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நான்கு சமூகங்கள் தவிர மற்ற அனைத்து சாதியினரும் ஓபிசி பிரிவுகளில் தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே தனித்தனியாக இட ஒதுக்கீடு கோரினால் தலையே சுற்றி விடும், எந்த ஒரு மாநிலத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்ற சமூகங்கள் இட ஒதுக்கீடு கேட்பது இயல்புதான், மகாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இந்த வழக்கில் மேல்முறையீடு சென்றாலும் தமிழக அரசு  தன் தரப்பில் என்ன வாதத்தை முன் வைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் அதற்கான தீர்ப்பும் அமையும் என கூறியுள்ளார்.  மொத்தத்தில் திமுகவின் ஆட்சி 70% விளம்பர ஆட்சி என்றும், தமிழகத்தின் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான வன்னியர் சமூகத்திற்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் கஸ்தூரி கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 

click me!