இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆனது செல்லாது...! அதிர்ச்சி அளித்த உயர்நீதிமன்றம்... உற்சாகத்தில் ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Aug 17, 2022, 11:55 AM IST
Highlights

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதில் உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து  அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பி எஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல் தயாரிக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ், ஜூலை 1ல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்ட விஜய் நாராயண், பொதுக்குழு சட்டப்படி தான் கூட்டப்பட்டது எனவும் விளக்கம் அளித்தார்.

வெளிநாட்டில் முதலீடு.? நெருக்கும் அமலாக்கத்துறை..! முதலமைச்சர் திடீர் டெல்லி பயணம்.. திகில் கிளப்பும் சவுக்கு

நீதிமன்றத்தில் காரசார விவாதம்

அப்போது நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டிலேயே  எப்படி பதவிகள் காலாவதி ஆனது என  கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகி விடுகின்றன என்றும்,  இருவரின் பதவிகள் காலாவதியாகி விட்டதால் தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பர் என தேர்தல் ஆணையத்தில் விளக்கமளித்து உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்களுக்கு பதிலளித்த பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார், ஜூன் 23 பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றால், இரு பதவிகளுக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கும் கேள்விக்கே இடமில்லை என்றும்,  பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிட்டால் இரு பதவிகளும் காலாவதியாகி விடும் என ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தில் எங்குமே குறிப்பிடவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.  எந்தவிதமான காலியிடமும் ஏற்படாத நிலையில், காலியிடம் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும், 2017ல் பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதற்கான காரணம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யத்தான் என்றும், ஆனால் இப்போது இருக்கும் சூழலே வேறு என்றும் சுட்டிக்காட்டினார். 

ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு.. சறுக்கிய ஈபிஎஸ்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆனது செல்லாது

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து. இன்று காலை நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில்  ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணாமாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளாரக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்தது செல்லாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவில் 23ஆம் தேதிக்கு பிறகு நடந்தது எதுவும் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு செயற்குழு கூட்டங்களை கூட்டக்கூடாது, பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவில் கூட்ட வேண்டும்.  பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக ஓபிஎஸ் தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. 

இதையும் படியுங்கள்

அதிமுக பொதுக்குழு செல்லுமா.? செல்லாதா.? நீதிமன்றத்தில் காரசார விவாதம்..! தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி

 

click me!