ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு.. சறுக்கிய ஈபிஎஸ்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

By Thanalakshmi VFirst Published Aug 17, 2022, 11:55 AM IST
Highlights

அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தொடுத்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.  மேலும் தனி கூட்டம் எதுவும் கூட்டம் கூட்டக் கூடாது எனவும் பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 7 ஆம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. எடப்பாழி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர் .

click me!