எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், திமுக தனது கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும். பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் குறைந்தபட்ச சமரசத்தைக் கூட திமுக செய்து கொள்ளாது. டெல்லிக்குக் காவடி தூக்கவா செல்கிறேன்?கை கட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்?கலைஞர் பிள்ளை நான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: “போதையில்லா தமிழகம்.. டாஸ்மாக் வசூல் 273 கோடி !” திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை!
எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும் என்பதும் அறிவோம். ஊழலற்ற, நேர்மையான, தேசிய சிந்தனை கொண்ட பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ள திமுகவால் இயலாது என்பதும் அறிவோம். மேலும், தமிழினத்தைக் கொன்று குவிக்க உதவிய போது டெல்லி காங்கிரசிடம் திமுக, கை கட்டி, வாய் பொத்தி காவடி தூக்கியது எப்படி என்பதும் தெரியும்.
இதையும் படிங்க: சென்னை, திருவள்ளூருக்கு பயங்கர ஆபத்து.. 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கும் ஆபாயம்.. தலையில் அடித்து கதறும்
இந்திரா காந்தி புடவை கட்டிய ஹிட்லர் என்று கூறி விட்டு, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன் நீங்கள் என்பதும் தெரியும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தொல்.திருமாவளவன் மணிவிழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்துகொள்ளாது. டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல. கலைஞர் பிள்ளை நான் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.