“போதையில்லா தமிழகம்.. டாஸ்மாக் வசூல் 273 கோடி !” திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை!

Published : Aug 16, 2022, 08:44 PM IST
“போதையில்லா தமிழகம்.. டாஸ்மாக் வசூல் 273 கோடி !” திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை!

சுருக்கம்

கனல் கண்ணனுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மறைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்தில் மாவட்டச் செயலாளர் டாக்டர் சரவணன் உட்பட பாஜக திரண்டு இருந்த பாஜகவினரை பார்த்து, இவனுங்களுக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது ?  இவனுங்களை எல்லாம் யார் இங்கே உள்ளே விட்டது ? என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் சத்தம் போட, அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பை வீசி எதிர்ப்பை தெரிவித்தனர் பாஜகவினர். 

இதை அடுத்து சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நிகழ்வான சென்னையில் உள்ள மதுரவயலில் நடைபெற்ற இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரத்தின் நிறைவு விழாவில் பேசிய திரைப்பட சண்டைக்காட்சி கலைஞர் மற்றும் இந்து முன்னணி கலை இலக்கிய மாநில தலைவர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன்பு இருக்கும் பெரியாரின் சிலை உடைக்கப்படும் நாளே இந்துக்களின் எழுச்சி நாள் என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகளுக்கு..“என்னை சந்திக்க வராதீர்கள்..எம்ஜிஆர் பாடல் !” சசிகலா திடீர் உத்தரவு - தொண்டர்கள் ஷாக்

கனல் கண்ணனுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களிலும் பாஜகவுக்கும், திமுகவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி பாஜக ஆளுங்கட்சியாக திமுகவின் மீது தொடர் தாக்குதல் பொதுமக்களிடையே கூட அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஆகஸ்ட் 11ல் போதையில்லா தமிழகத்தை உருவாக்க முதலமைச்சர் உறுதிமொழி எடுத்தார். ஆகஸ்ட் 14ல் டாஸ்மாக் நிறுவனம், ஒரு நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபான விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தங்களின் பயங்கரமான பாசாங்குத்தனத்தால் நம்மை அடிக்கடி வியப்பில் ஆழ்த்துவதை திமுக நிறுத்தாது’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..“திருந்திய ஓபிஎஸ், திருந்தாத இபிஎஸ்.. எல்லாமே எடப்பாடியின் பதவிவெறி !” ஓங்கி அடித்த டிடிவி தினகரன்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!