பாஜகவுடன் குறைந்த பட்ச சமரசம் கூட செய்ய மாட்டோம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!!

By Narendran S  |  First Published Aug 16, 2022, 8:23 PM IST

பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்த பட்ச சமரசத்தைக் கூட திமுக செய்து கொள்ளாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்த பட்ச சமரசத்தைக் கூட திமுக செய்து கொள்ளாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொல்.திருமாவளவன் மணிவிழா நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய கூறினார். கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும் தான்.

இதையும் படிங்க: சமூக நீதி அரசு என்பதை மீண்டும் நிரூபித்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டு.

Tap to resize

Latest Videos

ஆனால், திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்துகொண்டார்; கட்சி தொண்டர்கள்தான் அவருக்கு பிள்ளைகள். திருமாவளவனை பார்த்தால் 60 வயது ஆனவர் போல தெரியவில்லை, மேடையில் ஏறினால் 20 வயதானவரை போல் சிறுத்தையாக சீறுகிறார், புலியாக பாய்கிறார்.  30 ஆண்டுகளுக்கு முன் திருமாவளவனுடன் இந்த அளவு நெருங்கி பழகக்கூடிய நிலை ஏற்பட்டிருந்தால், நானே அவருக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்து வைத்திருப்பேன். பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்துகொள்ளாது.

இதையும் படிங்க: சமூக நீதி அரசு என்பதை மீண்டும் நிரூபித்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டு.

டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல. கலைஞர் பிள்ளை நான். திமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த உறவும் கிடையாது. நம்முடைய கொள்கை கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்த பட்ச சமரசத்தைக் கூட திமுக செய்து கொள்ளாது. திராவிட கருத்துகளை நிலை நிறுத்துவதற்காகத் தான் திமுக ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் திராவிட கருத்தியல்களை நிறைவேற்றத்தான். நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக இதை கூறுகிறேன் என்று தெரிவித்தார். 

click me!