அண்ணாமலை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.. பாஜகவில் இரட்டைத் தலைமை.. பகீர் கிளப்பும் டாக்டர் சரவணன்

By Ezhilarasan BabuFirst Published Aug 16, 2022, 6:06 PM IST
Highlights

பாஜகவில் அண்ணாமலையால் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது என்றும் பாஜகவிலும் அதிமுகபோல் இரட்டை தலைமை உள்ளது என்றும்  அக்கட்சியிலிருந்து வெளியேறியுள்ள டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். 

பாஜகவில் அண்ணாமலையால் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது என்றும் பாஜகவிலும் அதிமுகபோல் இரட்டை தலைமை உள்ளது என்றும்  அக்கட்சியிலிருந்து வெளியேறியுள்ள டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பல பரபரப்பு சம்பவங்களை ஏற்படுத்தி தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி தாங்கள் தான் என்பதை பாஜக நிலைநிறுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஒட்டு மொத்த  தமிழகத்திலும் பேசுபொருளாக மாறியிருப்பது பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் கார் மீது   காலனி வீசப்பட்ட விவகாரம்தான்,

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின், உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சரின் கார்மீது பாஜகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர் இந்தச் சம்பவம் பாஜகவின் மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணனின் தூண்டுதலின் பேரில் நடந்தது என பரபரப்பாக பேசப்பட்டது.

இதையும் படியுங்கள்: “என்னை சந்திக்க வராதீர்கள்..எம்ஜிஆர் பாடல் !” சசிகலா திடீர் உத்தரவு - தொண்டர்கள் ஷாக் 

அச்சம்பவத்திற்கு பின்னர் அமைச்சர் பிடிஆர்க்கு சவால் விடுத்து சரவணன் பேட்டி கொடுத்தார், ஆனால் திடீரென சரவணன் அன்று நள்ளிரவே அமைச்சரை நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று அவரிடம் மன்னிப்பு கோரினார். இது பாஜகவினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அதற்குள் பாஜகவிலிருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார், இந்நிலையில் பாஜக குறித்து பல்வேறு தகவல்களை டாக்டர் சரவணன் பேட்டியாக கொடுத்து வருகிறார், இதுதொடர்பாக அவர்  நமது ஏசியாநெட் செய்தி தளத்திற்கு தொலைபேசி வாயிலாக கொடுத்த பேட்டியின் விவரம் பின்வருமாறு.

இதையும் படியுங்கள்: சமூக நீதிக்கு எதிரானவர் கல்வித் தொலைக்காட்சி சிஇஓவா... ஸ்டாலின் அரசை டார்டாரா கிழிக்கும் ஜவாஹிருல்லா.

பாஜக என்ற கட்சியே தமிழ்நாட்டுக்கு ஒத்துவராத ஒரு கட்சி, ஆயிரம் தான் இருந்தாலும் நாமெல்லாம் திராவிடியன் ஸ்டாக்தான்,  அதனால் அக்கட்சியின் செயல்பாடுகள் நமக்கு ஒத்து வரவில்லை, என்னைப் போன்ற மனநிலையில் பலர் அக்கட்சியில் உள்ளனர், நான் அக்கட்சியிலிருந்து வெளியேறியவுடன் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு எங்களையும் கட்சியில் இருந்து விடுவியுங்கள் என கோரி வருகின்றனர், அக்காட்சியில் முழுக்க முழுக்க வெறுப்பு அரசியல் செய்கிற காட்சிதான், அக்கட்சித் தலைவர் அண்ணாமலையே கூட அக்காட்சியில் திருப்தியாக இல்லை,

ரஜினியை நம்பி வந்தார், ஆனால் ரஜினி அரசியலுக்கு வரப் போவதில்லை என கூறியதால் அவர் வேறு வழியின்றி பாஜகவில் சேர்ந்துள்ளார், ஆனால் இப்போதே பாஜகவின் அவர் தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலை உள்ளது. மொத்தத்தில் பாஜகவின் இரட்டை தலைமை உள்ளது, எந்த முடிவும் அண்ணாமலையார் தனித்து எடுக்க முடியாது, அக்கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மறைமுக தலைமையாக உள்ளார், நிர்வாகிகள் பட்டியலை அண்ணாமலை கொடுத்தால் அது உடனே ஏற்றுக் கொள்ளப்படாது,

ஆனால் தனிப்பட்ட முறையில் அண்ணாமலை மிகவும் நல்லவர், அனைவரையும் நன்கு மதிக்க கூடியவர், ஆனால் அவர்  தேர்ந்தெடுத்துள்ள அரசியல்தான் சரி இல்லை, ஐபிஎஸ் அதிகாரியான அவர் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றால் இயற்கை விவசாயம், ஏழை எளிய மாணவர்கள் படிக்க உதவி செய்திருக்கலாம் ஆனால் அவருக்கும் அரசியல் பதவி ஆசை இருப்பதாக அவர் பாஜகவுக்கு வந்திருக்கிறார் இவ்வாறு சரவணன் கூறினார். 
 

click me!