அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதகரமாக மாறியதை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இதையும் படிங்க: சமூக நீதிக்கு எதிரானவர் கல்வித் தொலைக்காட்சி சிஇஓவா... ஸ்டாலின் அரசை டார்டாரா கிழிக்கும் ஜவாஹிருல்லா.
இதை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி கிருஷணன் ராமசாமியிடம் பட்டியலிடப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: தமிழக்தில் பாஜக அசுரத்தனமான வளர்ச்சி.. அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக நிறுத்துங்க.. ஆர்.கே சுரேஷ்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. தலைமை நீதிபதியிடமும் முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதி பரிந்துரை அளித்திருந்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.