கடும் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், பதிலுக்கு போட்டியாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
அஇஅதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், பதிலுக்கு போட்டியாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என சட்ட ரீதியாக எடப்பாடி தரப்புக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சசிகலா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..“திருந்திய ஓபிஎஸ், திருந்தாத இபிஎஸ்.. எல்லாமே எடப்பாடியின் பதவிவெறி !” ஓங்கி அடித்த டிடிவி தினகரன்
அதில், 'எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்து கொண்டேன். உங்களுடைய அன்புக்கு நான் என்றைக்குமே அடிமை. உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. அதே சமயத்தில், நான் விரைவில் உங்களையெல்லாம் நேரில் வந்து சந்திக்க, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களையெல்லாம் நான் காண இருக்கிறேன். உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன்.
ஆகையால், தற்சமயம் எனது பிறந்த நாளுக்காக, நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் கண்முன்னே இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளையே, எனக்கு நீங்கள் அளிக்கின்ற, சிறந்த பிறந்த நாள் பரிசாக, மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதுவே, மறைந்த நம் புரட்சித்தலைவி அம்மாவுக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசாகவும் எண்ணுகிறேன். என் உயிரினும் மேலான கழகத் தொண்டர்களே, பொறுமையோடு இருங்கள்.
ஒளிமயமான எதிர்காலம் நம் முன்னே நமக்காகவே காத்துகொண்டு இருக்கிறது. அதாவது " நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி" என்று புரட்சித்தலைவர் பாடியது போன்று, இந்த மண் நம்மை போன்ற நல்லவர்களை, உண்மையானவர்களை, உறுதியானவர்களை, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை எதிர்பார்த்துதான் இன்றைக்கும் காத்து கொண்டு இருக்கிறது. ஆகவே, மண்ணை நேசிப்போம், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..“ஒரு பள்ளி மாணவர்கள்.. சிசிடிவியில் ஸ்பிரே !” பக்கா பிளானில் சொதப்பிய கும்பல் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்