இதுவும் போச்சா...! நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கிய இபிஎஸ் அணி

By Ajmal KhanFirst Published Jun 26, 2022, 4:26 PM IST
Highlights

அதிமுகவின் அதிகார நாளேடாக உள்ள நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரை இபிஎஸ் அணி நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் அதிகார மோதல்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அதிகார மோதல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக தலைமை பொறுப்பில், சசிகலா, டிடிவி தினகரன்,எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி என மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே செல்கிறது. அதிமுகவின் அதிகார நாளிதழாக நமது எம்.ஜிஆரும், ஜெயா டிவியும் இருந்தது. அதிமுகவில் இருந்து சசிகலாவை ஒதுக்கியதால் அந்த இரண்டும் சசிகலாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. இதனையடுத்து  நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவிற்கு என தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்கள் தொடங்கப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு நமது அம்மா என்கிற நாளிதழும், நியூஸ் ஜெ தொலைக்காட்சியும் தொடங்கப்பட்டது.

குடும்பத்திற்காக சுயநலமாக செயல்பட்டார்.! டிடிவி தினகரனோடு ரகசிய பேச்சுநடத்தினார்..ஓபிஎஸ் மீது சீறிய உதயகுமார்

ஓபிஎஸ் அணிக்கு திரும்பும் நிர்வாகிகள்..? பொதுக்குழுவில் நடைபெற்ற பிரச்சனைக்கு யார் காரணம்- வைத்தியலிங்கம்

ஓபிஎஸ் பெயரை நீக்கிய ஓபிஎஸ்

நமது அம்மா நாளிதழை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது கட்டுப்பாட்டில் வைத்து நடத்தி வருகிறார். இதே போல நியூஸ் ஜெ தொலைக்காட்சியை  முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகத்தின் அண்ணன் சி.வி.ராதாகிருஷ்ணனும், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ், எஸ்.பி. வேலுமணியின் அண்ணன் மகன் விவேக் பெயரிலும் தொடங்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் காரணமாக ஓபிஎஸ்க்கு எதிராக 95% மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஓபிஎஸ்சை அதிமுகவில் இருந்து கழட்டி விடும் நிலையில் உள்ளனர். இந்தநிலையில் அதிமுகவின் அறிக்கை மற்றும் தலைவர்களின் பேட்டிகள் மற்றும் பொதுக்கூட்டங்களின் பேச்சுக்களை வெளியிடுவதற்காக தொடங்கப்பட்ட நமது அம்மா நாளிதழில் நிறுவனராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி பெயர்கள் இடம்பெறும் தற்பொழுது ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரை இபிஎஸ் அணியினர் நீக்கியுள்ளனர். எனவே அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கும் நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

80 சதவிகித தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்களோ அவர்கள் பக்கமே அதிமுக ..! கண்ணீர் விட்டு அழுத செல்லூர் ராஜு

click me!