செந்தில் பாலாஜி தம்பி கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை திடீர் சோதனை..! காரணம் என்ன.?

By Ajmal Khan  |  First Published Aug 9, 2023, 2:56 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை 


கரூர் பங்களாவில் அமலாக்கத்துறை சோதனை

அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த் ஜூன் மாதம் கைது செய்தது. இதனையடுத்து புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில்,  கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டிற்கு இன்று காலை  இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனையை நடத்தி வருகின்றனர். இந்த வீட்டில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் முதன்முறையாக சோதனையை தொடங்கினர். 

Latest Videos

undefined

அப்போது கட்டுமான பணி நடைபெறும் சுற்றுச்சுவரின் கதவில் அசோக் குமார் நேரில் ஆஜராக கூறி முதன்முறையாக சம்மன் ஒட்டி இருந்தனர். சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த 3 மற்றும் 4ஆம் தேதிகளில் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு மற்றும் அலுவலகம், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனலட்சுமி மார்பிள்ஸ் என்ற டைல்ஸ் ஷோரூம் மற்றும் அதன் உரிமையாளர் பிரகாஷ் என்பவரின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இதே போல கோவையில் டாஸ்மாக் மேலாளர் மற்றும் கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடத்திய நிலையில், இன்று மீண்டும் அமலாக்கத்துறை கரூரில் உள்ள அசோக்குமாரின் பங்களாவில் சோதனை தொடங்கியுள்ளது. 

இதையும் படியுங்கள்

அண்ணாமலையை விமர்சித்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம்- பாஜக எச்சரிக்கை

click me!