கல்வி நமக்கு இங்கே சுலபமாக கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் கல்வி நமக்கு எட்டாக்கனி! இன்றைக்கு நாம் எல்லோரும் படிக்கிறோம் என்றால், அதற்குப் பின்னால், நம்முடைய முன்னோர்கள் நடத்திய, ஏராளமான போராட்டங்கள்தான் காரணமாக இருக்கிறது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கணும், அது கல்வியிலும் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னையில் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழககலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்;- தமிழ்நாட்டினுடைய பள்ளிக் கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்! கொண்டாட்டத்திற்குரிய நாளாக அமைந்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியோடு தான் உங்களை எல்லாம் நான் சந்திப்பதற்கு வந்திருக்கிறேன். உங்கள் பெற்றோருக்கு இருக்கின்ற அதே அக்கறையுடனும், அன்புடனும் நீங்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு குழந்தைகள் எல்லோரும் கல்வி கற்கவேண்டும், உயர் படிப்புகளுக்குப் போகவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஏனென்றால், கல்வி நமக்கு இங்கே சுலபமாக கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் கல்வி நமக்கு எட்டாக்கனி! இன்றைக்கு நாம் எல்லோரும் படிக்கிறோம் என்றால், அதற்குப் பின்னால், நம்முடைய முன்னோர்கள் நடத்திய, ஏராளமான போராட்டங்கள்தான் காரணமாக இருக்கிறது.
இதையும் படிங்க;- மண்ணுக்கு துரோகம் செய்த எட்டப்பன்.. துரோக வரலாற்றின் கூடாரமே திமுக தான்! பன்னீருக்கு ஜி.கே.மணி பதிலடி..!
நீதிக்கட்சி காலத்தில் இருந்து சமூக நீதியை வலியுறுத்தி வரும் சமூக சீர்திருத்தத் தலைவர்களால் தான் இந்த மாற்றத்தை நம்மால் உருவாக்க முடிந்தது. இந்த மாற்றத்தை இன்னும் சிறப்பாக்க நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
* நான் முதல்வன்
* இல்லம் தேடி கல்வி
* புதுமைப் பெண்
* அனைவர்க்கும் ஐஐடி போன்ற திட்டங்கள்.
அரசு பள்ளி - தனியார் பள்ளிகளும், அரசு கல்லூரி – தனியார் கல்லூரிகளும், நிர்வாக அமைப்பில் வேறுபாடு கொண்டதாக இருக்கலாம். ஆனால் தரத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரே அளவுகோலோடுதான் இயங்கவேண்டும். இந்த நிறுவனங்கள் எல்லோருக்கும் பொதுவான நிறுவனங்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட சமச்சீர் நிலையைதான் உருவாக்கி வருகிறோம். நாட்டினுடைய முதன்மைக் கல்வி நிறுவனங்களில் இதுவரைக்கும் நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்கள் மிகக் குறைவான அளவில்தான் உயர்கல்விக்காகப் போயிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும். கல்வியிலேயும் இதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய நிலைப்பாடு. அதிலும், உயர்கல்விக்குப் போகின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இதையும் படிங்க;- ஒரே வீட்டில் 3 வருஷமாக லிவிங் டு கெதர்! கரு கலைப்பு! திருமணமான 2 நாளில் எஸ்கேப்பான போலீஸ் காதலன்! கதறும் பெண்
தமிழ்நாட்டினுடைய எங்கேயோ ஒரு கிராமத்தில் இருக்கின்ற ஒரு அரசுப்பள்ளியில் படித்த ஒரு மாணவரால், ஏன் இதுவரைக்கும்ஐஐடி, என்எல்யு, நிஃப்ட் போன்ற நாட்டினுடைய முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்குப் போக முடியாமல் இருந்தது என்றால், அதற்கு என்று தனியாக சமூகப் பொருளாதாரக் காரணங்கள் இருக்கிறது. நம்முடைய குழந்தைங்களுக்கு நாட்டினுடைய உயர்கல்வி நிறுவனங்கள் எவை? அதில் நுழைய எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் முறை என்ன? இப்படி பல தகவல்கள் சென்று சேராமல் இருந்தது. இப்போது அந்தப் பாதைய உருவாக்கி இருக்கோம். அதுனால, இன்னைக்கு 225 மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு போகப்போறாங்க. சிறிய ஊக்கமும் வழிகாட்டலும் இருந்தால் தமிழ்நாட்டு மாணவர்கள் அடித்து தூள் கிளப்பி விடுவீர்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.