நமக்குள் இருப்பது அண்ணன்,தம்பி பிரச்சனை.. எதிரி திமுக தான்.. இணைப்புக்கு அச்சாரமா? SP வேலுமணியின் பேச்சு..!

By vinoth kumarFirst Published Feb 9, 2021, 6:17 PM IST
Highlights

நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனை தான். குடும்பம் என்றால் பிரச்சனை இருக்க தான் செய்யும்  எனவும்  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனை தான். குடும்பம் என்றால் பிரச்சனை இருக்க தான் செய்யும்  எனவும்  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

கோவையில் நடந்த அதிமுக கட்சி நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்;-  நம் எதிரி திமுக, நமக்குள் இருப்பது அண்ணன், தம்பி பிரச்சனைதான். குடும்பம் என்றால் பிரச்சனை இருக்க தான் செய்யும். நாம் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். முதல்வராக பழனிசாமி வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். 

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால்தான் அனைத்திலும் நாம் வெற்றி பெற முடியும். மீண்டும் சொல்கிறேன், அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றினால்தான் வெற்றி பெற முடியும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். 

ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அதிமுக அமமுக இணைப்பு 100 சதவீதம் வாய்ப்பில்லை கூறிவந்தனர். இந்நிலையில், சசிகலா சென்னை திரும்பி இருக்கும் நிலையில் அதிமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர் இவ்வாறு பேசி இருப்பது பேசும் பொருளாகியுள்ளது. 

முன்னதாக எங்களை பொருத்தவரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே பொது எதிரி திமுக தான் டிடிவி.தினகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!