சசிகலா ஒரு காலாவதியான மருந்து... வைகை செல்வன் விமர்சனம்..!

Published : Feb 09, 2021, 06:08 PM IST
சசிகலா ஒரு காலாவதியான மருந்து... வைகை செல்வன் விமர்சனம்..!

சுருக்கம்

ஸ்டாலின் ஒரு கொரானா என்றால் உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரானா. இருவரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சசிகலா ஒரு காலாவதியான மருந்து.  சசிகலாவை பொது செயலாளராக நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்கம்புணரியில் அதிமுக  செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் பேசினார்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் பேசும்போது, ’சசிகலா கலாபதியான மருந்து. அவரை பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் தீர்மானத்தை வாசித்தது நான்தான். நாங்கள் உங்களை ஏற்றுக் கொண்டோம். ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே.

ஆதலால் இபிஎஸும்  ஓபிஎஸும் கட்சியை வழிநடத்தினார்கள். டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு கடன் பாக்கி வைத்து தலைமறைவு ஆனவர். ஸ்டாலின் ஒரு கொரானா என்றால் உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரானா. இருவரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!