அதிமுக வெற்றிக்காக 3 விரல்களை வெட்டிய ஏட்டு... சசிகலாவுக்கு எதிர்ப்பு..!

By vinoth kumarFirst Published Feb 9, 2021, 5:24 PM IST
Highlights

அதிமுக வெற்றிக்காக 3 விரல்களை வெட்டிக்கொண்டு பிரபலமான விரல்வெட்டி ஏட்டு  ரத்தினம் சசிகலா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டியுடன் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.


அதிமுக வெற்றிக்காக 3 விரல்களை வெட்டிக்கொண்டு பிரபலமான விரல்வெட்டி ஏட்டு  ரத்தினம் சசிகலா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டியுடன் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சேலம் மாவட்டம், காரிப்பட்டியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு ரத்தினம், 70. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். 2004ல், போலீசில் ஏட்டாக பணிபுரிந்தார். அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார். ரத்தினம், தமிழகத்தில், 39 தொகுதிகளில், அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டி, தன் இரு விரல்களை, அயோத்தியா பட்டணம், ராமர் கோவிலில் வெட்டி, பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, 2006ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, மேலும், இரு விரல்களை வெட்டினார். ஆனாலும், அதிமுக தோல்வியை தழுவியது. நான்கு விரல்களை இழந்த ரத்தினம், 2007ல், போலீசில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், கடந்த 2007ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்ற அவர் எம்ஜிஆர் வேடமிட்டுக்கொண்டு அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சார கூட்டங்களில் ஈடுபட்டு வந்தார். 

கடந்த சில ஆண்டுகளாக பொதுவெளியில் வருவதை தவிர்த்த அவர் தற்போது மீண்டும் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். அதன்படி நேற்று எம்ஜிஆர் வேடமணிந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். திரும்பி போ... திரும்பி போ.. என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை தன்னுடன் எடுத்து வந்து நீண்ட நேரம் நின்று மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
 

click me!