ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பணப்பட்டுவாடா..? புகார் அளித்த பாஜக..! விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்

By Ajmal KhanFirst Published Feb 3, 2023, 9:39 AM IST
Highlights

ஈரோடு இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா நடைபெறுவதாக பாஜக புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சத்ய பிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல்- அதிமுக கூட்டணி

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானார் இதைனையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு போட்டியிடுகிறார். இதே போல ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அணிகள் சார்பாகவும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் பாஜக களம் இறங்குகிறதா.? அல்லது வேறு யாருக்கேனும் ஆதரவு தெரிவிக்கவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது வரை எந்தவித முடிவும் அறிவிக்காமல் உள்ளது.

இபிஎஸ் இரட்டை இலை சின்னம் கேட்டு வந்தால் கையெழுத்து போடுவேன்! கண்டிப்பாக சசிகலாவை சந்திப்பேன்! ஓபிஎஸ் உறுதி.!

வீடியோ வெளியிட்ட அண்ணாமலை

இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரித்து வேட்பாளர் அறிமுக கூட்டம் திமுக சார்பாக நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் போது அமைச்சர் கேஎன் நேருவும், ஈவிகேஎஸ் இளங்கோவனும் பேசியதாக வீடியோ ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் கட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக பேசியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே பணம் பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் பாஜக புகார் அளித்திருந்தது.

விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்

இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா தொடர்பாக எழுந்த புகாருக்கு விளக்கம் அளிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பணம்பட்டுவாடா புகார் தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி இன்றோ அல்லது நாளையோ விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவா.? இபிஎஸ்யை சந்தித்த அண்ணாமலை.! அதிர்ச்சியில் ஓபிஎஸ்

click me!