ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவா.? இபிஎஸ்யை சந்தித்த அண்ணாமலை.! அதிர்ச்சியில் ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Feb 3, 2023, 9:02 AM IST
Highlights

அதிமுக- பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி மற்றும் அண்ணாமலை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக- பாஜக மோதலா.?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடவுள்ள நிலையில், அதிமுக சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு களம் இறங்குகிறார். இந்தநிலையில் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தர வேண்டும் என இபிஎஸ் அணியின் ஆதரவாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து கோரிக்கை விடுத்த நிலையில், இது தொடர்பாக எந்தவித உறுதியும் பாஜக தலைமை அளிக்காமல் இருந்தது. இதே போல ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களோடு அண்ணாமலையை சந்தித்து தங்கள் அணியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.

இபிஎஸ் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்யுங்கள்!ஓபிஎஸ் உடன் சேர்ந்த தேர்தல் ஆணையம்?இன்று என்ன நடக்கும்?.திக்..திக்

இபிஎஸ்சை சந்தித்த அண்ணாமலை

இந்த குழுப்பமான சூழ்நிலைக்கு மத்தியில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தில் பாஜக தலைவர்களின் புகைப்படம் அகற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முன் தினம் திடீரென டெல்லி சென்றிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய தலைவர்களை சந்தித்த ஆலோசித்ததாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி மற்றும் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவிற்கு ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.  

அதிர்ச்சியில் ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி அணிக்கு பாஜக மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் அணியை அதிர்ச்சிஅடையவைத்துள்ளது. பாஜக தேர்தலில் போட்டியிட்டால் தங்கள் அணியின் வேட்பாளரை விலக்கிகொள்ள தயார் என ஓபிஎஸ் தெரிவித்த நிலையில், அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளாத பாஜக, எடப்பாடி பழனிசாமி அணியின் தலைமைக்கு அங்கீகரித்துள்ளது ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது,

இதையும் படியுங்கள்

இபிஎஸ்-ஐ இடைக்காலப் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க இயலாது.. அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!!

click me!