இபிஎஸ் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்யுங்கள்!ஓபிஎஸ் உடன் சேர்ந்த தேர்தல் ஆணையம்?இன்று என்ன நடக்கும்?.திக்..திக்

By Ajmal KhanFirst Published Feb 3, 2023, 8:14 AM IST
Highlights

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடவுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் இரண்டு அணியும் போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தரப்பு வேட்பாளரை அங்கீகரித்து இடைக்கால பொதுச் செயலாளர் என்று கையொப்பமிட்டு தான் அனுப்பும் வேட்பாளரை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

ஸ்டாலின் சென்ற ரயிலில் பெண் செய்த காரியம்! திடீரென நின்ற ரயில்! உஷாரான முதல்வரின் பாதுகாவலர்கள்!நடந்தது என்ன?

 இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்

உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு எடப்பாடி பழனிச்சாமி சார்பில் முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கு தொடர்பாக உத்தரவிட்ட நீதிபதிகள்,  அடுத்த மூன்று நாட்களுக்குள் தேர்தல  ஆணையம் மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணை 3ஆம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து  ஓ.பன்னீர் செல்வம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தன்னை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரிய எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் மனு பதில் மனு தாக்கல் செய்துள்ளார். பொதுக்குழு வழக்கின் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இபிஎஸ் தரப்பு இடையீட்டு மனு தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். 

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்... தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!!

உச்சநீதிமன்றத்தின் முடிவு என்ன.?

இந்த நிலையில் எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் தேர்தல் ஆணையமும் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில்,  இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுகவின் இருதரப்பும் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியின் உட்கட்சி தேர்தல்களை எல்லாம் தேர்தல் ஆணையம் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரட்டை இலை ஒதுக்கீடு பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார் என்று தேர்தல் ஆணையம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதிலால் எடப்பாடி அணி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், யாருக்கு சாதகமாக உத்தரவு வரும் என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு காத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

இபிஎஸ் இரட்டை இலை சின்னம் கேட்டு வந்தால் கையெழுத்து போடுவேன்! கண்டிப்பாக சசிகலாவை சந்திப்பேன்! ஓபிஎஸ் உறுதி.!

click me!