இபிஎஸ் இரட்டை இலை சின்னம் கேட்டு வந்தால் கையெழுத்து போடுவேன்! கண்டிப்பாக சசிகலாவை சந்திப்பேன்! ஓபிஎஸ் உறுதி.!

By vinoth kumar  |  First Published Feb 3, 2023, 6:40 AM IST

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்கள் மற்றும் பாஜகவின் விருப்பமாக இன்று வரை உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம்;- அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். நிதிநிலை குறித்த விரிவான அறிக்கையில் எய்ம்ஸ் குறித்து பதில் இருக்கும் என்று நம்புகிறேன். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து நிலையிலும், அனைத்து தரப்பிலும் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச்செல்லும்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- இபிஎஸ்-ஐ இடைக்காலப் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க இயலாது.. அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!!

சசிகலா உறுதியாக சந்திப்பேன்

மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில வளர்ச்சிக்கு திமுக அரசு பயன்படுத்த வேண்டும். அதிமுக சட்ட விதிப்படி நடந்த அமைப்பு ரீதியான தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி 2026 வரை இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் நான் கையொப்பமிடுவேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலா உறுதியாக சந்திப்பேன்.

இதையும் படிங்க;-  பாஜக போட்டியிட்டாலும் வேட்பாளரை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.. ஜெயக்குமார் திட்டவட்டம்.!

 பாஜக விருப்பம்

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்கள் மற்றும் பாஜகவின் விருப்பமாக இன்று வரை உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். தேர்தல் பணிமனை பெயர் மாற்றம் குறித்து அவர்களிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் தொடர்பாக சுற்றுப்புற ஆய்வாளர்கள் அங்கு இருக்கின்ற மீனவர்கள் மற்றும் மீனவ சங்கங்களிடம் கருத்துகளை கேட்டுள்ளேன். முழுமையான கருத்துகள் கிடைக்கப்பெற்ற உடன் அதிமுகவின் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என ஓபிஎஸ் கூறியுள்ளார். 

click me!