மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு எதிரானதுதான் திராவிட மாடல்.. மாஸ் காட்டிய தமிழக முதல்வர்.

By Ezhilarasan Babu  |  First Published Oct 5, 2022, 12:49 PM IST

திமுக ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல, அரசியல் சுயலாபத்திற்காக சுயநலத்திற்காக மக்களிடையே உயர்வு தாழ்வு கற்பிக்க ஆன்மீகத்தை பயன்படுத்துவோருக்கு எதிரானது என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.


திமுக ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல, அரசியல் சுயலாபத்திற்காக சுயநலத்திற்காக மக்களிடையே உயர்வு தாழ்வு கற்பிக்க ஆன்மீகத்தை பயன்படுத்துவோருக்கு எதிரானது என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதத்தை வைத்து பிழைக்கும் சிலர் திராவிட ஆட்சியை ஆன்மீகத்திற்கும் மக்களின்  நம்பிக்கைக்கு எதிரானது என பிரச்சாரம் செய்து வருகின்றனர் என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் இன்று வள்ளலார் முப்பெரும்  விழாவை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- 

Tap to resize

Latest Videos

வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது,  தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும், அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை சமத்துவ நாளாகவும் அறிவித்த திராவிட மாடல் ஆட்சி இன்று வள்ளலார் பிறந்த தினத்தை தனிப்பெரும்கருணை நாளாக அறிவித்திருப்பது பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம்.

இதையும் படியுங்கள்: மோடி சொல்லியே கேட்காத எடப்பாடி பழனிச்சாமி.. வழக்குகளை ரத்த செய்வதற்காக திமுகவுடன் பேரம்.. பகீர் தகவல்.

திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல, ஆனால் அது ஆன்மீகத்திற்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என வெட்டி ஒட்டி திரித்து பரப்புகின்றனர்,  மதத்தை வைத்து பிழைக்கும் சிலர் இங்கு இருக்கின்றனர்.  திராவிட மாடல் ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல, ஆனால் ஆன்மீகத்தை தங்களது சொந்த நலனுக்கும் உயர்வு தாழ்வு கற்பிக்க பயன்படுத்துவோர்க்கு எதிரானதுதான் திராவிடமாடல் ஆட்சி, பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்ற வள்ளுவரின் மண் தமிழ் மண்.

நட்ட கல் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் எனும் சித்தர்கள் உலவிய மண் இந்த மண். இறைவன் ஒருவனே இறைவன் ஜோதிமயமான இருக்கிறான் என வள்ளலார் வாழ்ந்த மண் இது, அதே போல தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தை முன்வைத்தார் அண்ணா, தேர்தல் அறிக்கையில் கூறியது போல வடலூரில் வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கப்படும்,  100 கோடி மதிப்பில் அதற்கான பணிகள் நடக்கிறது,  விரைவில் கட்டுமான பணி தொடங்கும் என்றார்.

இதையும் படியுங்கள்: பாஜகவின் இந்தி மொழிவெறி.. ஏன்..? எதற்கு..? புதிய கல்விக் கொள்கை.. மத்திய அமைச்சருக்கு முரசொலி பதிலடி.

வள்ளலாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு ஆண்டிற்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட உள்ளது, அதற்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பசிப்பிணி  நீக்கி அறிவுப்பசிக்கு தீனி வழங்கும் அரசு.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோட்டைக்கு வருவதைவிட கோவிலுக்கு செல்வதுதான் அதிகம், ஒரு நாளைக்கு மூன்று ஊர்களில் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு சென்று பணியை செய்பவர் சேகர்பாபு.  இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!