அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மீதான ஊழல் வழக்குகளை ரத்து செய்வதற்காக திமுக தரப்பிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மீதான ஊழல் வழக்குகளை ரத்து செய்வதற்காக திமுக தரப்பிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகரன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் கருணாநிதி புகைப்படம் வைப்பது தொடர்பாக பேச்சு எழுந்தபோது முன்னாள் முதல்வர் கருணாநிதியை பற்றி ஓபிஎஸ்சை பேச சொன்னதே எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி ஓபிஎஸ் தரப்பின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகரன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளம் ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் மத கலவரம் நடக்க கூடாது.. விசிக திருமாவளவனின் அழைப்பை ஏற்ற வேல்முருகன்.!
அதாவது தங்கமணி வலுவாக உள்ளதாக கருதும் நாமக்கல் பகுதியில் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஓபிஎஸ் பொறுப்பு வழங்கியுள்ளார். இதனால் தன்னுடைய செல்வாக்கு சரிந்து விடும் என்ற அச்சத்தில் தங்கமணி ஓபிஎஸ் தரப்பில் மீது இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். உளறி கொட்டியிருக்கிறார்.
இதையும் படியுங்கள்: நீதிமன்றம் சொன்னால் நாங்கள் நிற்க வேண்டுமா? நடத்துநரின் ஆணவ பேச்சால் பயணிகள் அதிர்ச்சி
அதேபோல் பேச்சுவார்த்தையின்போது நத்தம் விஸ்வநாதனை வைத்தியலிங்கம் அடிக்கடி சந்தித்ததாக கூறுவது தவறானது, அவர்கள் மனசாட்சியோடு பேச வேண்டும், கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை தலைமைச்செயலகத்தில் வைப்பது தொடர்பாக பேச்சு எழுந்தபோது கருணாநிதி குறித்து ஓபிஎஸ்சைப் பேசச் சொன்னது எடப்பாடி பழனிசாமி தான், ஆனால் இப்போது ஓபிஎஸ் கருணாநிதியின் பராசக்தி வசனம் குறித்து பேசியது தவறு என்று கூறுகின்றனர். ஏன் கருணாநிதியைப் பற்றி எடப்பாடி பழனிச்சாமியும்தான் புகழ்ந்து பேசினார் அப்படி என்றால் அது தவறு இல்லையா?
பராசக்தி வசனம் குறித்து ஓபிஎஸ் பேசியதில் என்ன தவறு இருக்கிறது, அப்போது அதிமுக என்ற கட்சியே உருவாகவில்லை ஏன் இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாக திமுகவுடன் ரகசிய பேரம் நடத்தி வருகிறார்கள், அவர்கள் யார் யார் என்ற பட்டியல் விரைவில் வெளியிடுவேன். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது பலமுறை டெல்லிக்கு சென்றார், அப்போது ஒரு முறை கூட பன்னீர்செல்வத்தை அழைத்து செல்லவில்லை, பிரதமர் மோடி அறிவுறுத்தியும் கூட அதன் பிறகும் ஓபிஎஸ்சை அழைத்துச் செல்லவில்லை. இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.